Connect with us

என்னய்யா போலீஸ் காரங்கன்னா உனக்கு அவ்வளவு கேவலமா போச்சா!.. வடிவேலு ஆஃபிஸை சுத்து போட்ட போலீஸ். காப்பாற்றிய இயக்குனர்!..

vadivelu police

Latest News

என்னய்யா போலீஸ் காரங்கன்னா உனக்கு அவ்வளவு கேவலமா போச்சா!.. வடிவேலு ஆஃபிஸை சுத்து போட்ட போலீஸ். காப்பாற்றிய இயக்குனர்!..

Social Media Bar

பிரபல காமெடி நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் வடிவேலு. கவுண்டமணி செந்தில் மாதிரியான காமெடி நடிகர்கள் மிக பிரபலமாக இருந்த காலக்கட்டத்திலேயே தன்னுடைய தனித்துவமான காமெடி மூலமாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகர் வடிவேலு.

கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமடைந்து பிறகு தமிழ் சினிமாவிலேயே அதிகமாக வரவேற்பை பெற்ற நடிகராக மாறினார் வடிவேலு. இந்த நிலையில் நிறைய திரைப்படங்களில் காமெடி போலீஸாக நடித்திருக்கிறார் வடிவேலு. ஆனால் ஒரு திரைப்படத்தில் அப்படி போலீஸாக நடித்ததால் அவர் அலுவலகம் தேடி போலீஸ் வந்த சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

vadivelu-1
vadivelu-1

வடிவேலு சுராஜ் இயக்கத்தில் மருதமலை திரைப்படத்தில் போலீஸாக நடித்திருப்பார். அதில் ஒரு காட்சியில் மாமூல் வசூல் செய்வதற்காக அவர் செல்லும்போது அதே கடைக்கு பிச்சைக்காரன் ஒருவனும் வருவான். இருவரையும் ஓரமாக நிற்க சொல்லுவார் கடைக்காரர்.

இந்த நிலையில் படம் வெளியான பிறகு வடிவேலு அலுவலகத்தை தேடி போலீஸ் வந்திருக்கின்றனர். என்ன அந்த படத்தில் போலீஸை பிச்சைக்காரர்களுக்கு இணையாக காட்டியிருக்கிறாய். என்று கோபமாக பேசியிருக்கிறார். ஐயா அது இயக்குனர் பண்ணுனது ஐயா என வடிவேலு கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் போலிஸாரிடம் பேசி அவர்களை சமாதானப்படுத்தியுள்ளார் இயக்குனர் சுராஜ். இந்த நிகழ்வை அவர் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
To Top