மூணாவது சிங்கிளா விடுறிங்க? மொத்த பாட்டையும் விடுறேன்! – வாரிசு துணிவு நியு அப்டேட்!

பொங்கல் நெருங்க நெருங்க வாரிசு துணிவு இரு படங்களுக்கும் இடையே உள்ள போட்டிகளும் கூட அதிகரித்து வருகிறது. வாரிசு துணிவு இரு படங்களுமே தொடர்ந்து அப்டேட்களை விட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று துணிவு படத்தின் புதிய அப்டேட் வெளியானது. துணிவு படத்தின் அடுத்த பாடலான கேங்க்ஸ்டா என்னும் பாடல் வருகிற 24 ஆம் தேதி ஞாயிற்று கிழமை வெளியாவதாக அறிவிக்கப்பட்டது.

அதே போல வாரிசு படமும் ஒரு அப்டேட்டை புது போஸ்டருடன் வெளியிட்டனர். வாரிசு படத்தின் அனைத்து பாடல்களுமே வருகிற 24 ஆம் தேதி அதே ஞாயிற்று கிழமை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இன்னும் படத்தின் ட்ரைலரே வராத நிலையில் பாடல் வெளியிடுவதற்கே இரண்டு படங்களும் சரிக்கு சரி மல்லுக்கட்டுவதை பார்க்கும்போது பொங்கலுக்கு சிறப்பான சம்பவங்கள் இருக்கும் போல என ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

அப்டேட்கள் வெளியிடுவதை பொறுத்தவரை துணிவு படத்தையும் விடவும் வாரிசு ஒரு அடி முன்னால் இருப்பதாகவே தெரிகிறது.

Refresh