வாரிசு ஆடியோ லாஞ்ச் எப்போ? – தேதி கன்ஃபார்ம் செய்துள்ள படக்குழு..!

நடிகர் விஜய் நடித்து வருகிற பொங்கலுக்கு வரவிருக்கும் திரைப்படம் வாரிசு. தெலுங்கு மக்களை டார்கெட் செய்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தெலுங்கு சினிமாவில் வெளியாவதிலேயே தற்சமயம் சிக்கலை கண்டுள்ளது.

அதாவது தெலுங்கர்களின் பொங்கலான சங்கராந்தி அன்று வாரிசு வெளியாக இருந்தது. ஆனால் அன்றைய தினத்தில் தெலுங்கு படத்திற்கே முக்கியத்துவம் கொடுப்போம், அதனால் வாரிசு படத்தை அன்று வெளியிட முடியாது என தெலுங்கு திரைப்பட சங்கம் தெரிவித்துள்ளது.

இதனால் படத்தின் ரீலிஸ் தேதி ஒத்திவைக்கப்படுமோ? என கவலையில் இருந்தனர் விஜய் ரசிகர்கள். இந்நிலையில் படம் கண்டிப்பாக பொங்கலுக்கு வெளியாகும் என நம்பிக்கையுடன் கூறியுள்ளது படக்குழு.

படத்திற்கு முன்பே அதன் பாடல்களை வெளியிட வேண்டும். எனவே அடுத்த மாதத்தில் கண்டிப்பாக பாடல்கள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகப்பட்சம் கிருஸ்மஸ்க்கு முதல் நாளான டிசம்பர் 24 ஆம் தேதி வாரிசு படத்தின் அனைத்து பாடல்களும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Refresh