News
ஒரு வழியாக வாரிசு படத்தின் முதல் சிங்கிள் வருது – தேதியை முடிவு செய்த படக்குழு
விஜய் நடிக்கு வாரிசு மற்றும் அஜித் நடிக்கும் துணிவு. இந்த இரண்டு திரைப்படங்கள்தான் தற்சமயம் தமிழ் திரையுலகில் ஹாட் டாப்பிக்காக போய்க்கொண்டுள்ளது.

8 வருடங்களுக்கு பிறகு இருவரின் படமும் ஒன்றாக வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வாரிசு படத்தின் முதல் சிங்கிள் பாடல் குறித்து பல வதந்திகள் கிளம்பி வந்தன.
பிரின்ஸ் படத்தின் வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்ட இசையமைப்பாளர் தமன் “தீபாவளி அன்று வாரிசு படத்தின் முதல் சிங்கிள் வருகிறது” என கொழுத்தி போட ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் இருந்தனர்.
ஆனால் தீபாவளி அன்று வாரிசு பாடல் வரவில்லை என படக்குழு அறிவித்துவிட்டது. ஏனெனில் பாடலுக்கான வேலைகள் இன்னும் முழுதாக முடியவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் அடுத்த வாரம் வாரிசு படத்தின் முதல் சிங்கிள் வரும் என தகவல்கள் வந்துள்ளன.
எனவே ரசிகர்கள் பாடலுக்காக காத்துக்கொண்டுள்ளனர். முன்பே லீக் ஆன ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடலே முதல் சிங்கிளாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
