வாரிசு, துணிவு ரிலீஸ் தேதி கன்பார்ம்? – காத்திருக்கு சம்பவம்!

பல வருடங்களுக்கு பிறகு அஜித் நடிக்கும் துணிவு மற்றும் விஜய் நடிக்கும் வாரிசு இரண்டு திரைப்படங்களும் போட்டி போட்டுக்கொண்டு வெளியாக இருக்கிறது. வருகிற பொங்கலை முன்னிட்டு இரண்டு படமும் வெளியாகும் என தகவல்கள் வந்திருந்தன.

Social Media Bar

வாரிசு படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சியும், துணிவு படத்தை இயக்குனர் ஹெச். வினோத்தும் இயக்குகின்றனர். படத்தின் டப்பின் மற்றும் இறுதிக்கட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடந்துக்கொண்டுள்ளன. எப்படியாவது பொங்கலுக்கு படத்தை வெளியிட வேண்டும் என இரண்டு படக்குழுக்களுமே போட்டி போட்டு வருகிறது.

விஜய் அஜித் ரசிகர்களுமே கூட இந்த படத்திற்காக காத்திருக்கின்றனர். ஆனால் இன்னும் படம் எந்த தேதியில் வெளியாகிறது என்பது குறித்த சரியான தகவல் தெரியவில்லை. ஆனால் திரை வட்டாரத்தில் பேசப்படுவதை வைத்து பார்க்கும்போது அதிகப்பட்சம் இரண்டு படங்களுமே ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தல தளபதி ரசிகர்களுக்கு ஜனவரி 12 முக்கியமான நாளாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.