GOAT Movie : ரசிகர்கள் அடிச்ச அடியில் திரும்ப வேலை நடந்துருக்கு.. கோட் ட்ரைலரில் இந்த மாற்றத்தை கவனிச்சீங்களா!..

தமிழ் சினிமாவில் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கும் படம் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் கோட் திரைப்படம். சினிமா வட்டாரங்கள் மட்டுமல்லாமல் விஜய் ரசிகர்களும், அஜித் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் கோட்.

விஜய் தன்னுடைய கடைசி படங்களாக இரு படங்களில் நடிக்கும் நிலையில், அதில் ஒரு படமாக வெளிவர இருக்கும் கோட் திரைப்படத்தை பற்றிய ஆவல் அனைவருக்கும் எழுந்துள்ளது.

இந்நிலையில் கோட் படத்தின் பாடல் வெளியாகி இருந்த நிலையில், அதில் விஜயின் இளமையான தோற்றத்தை குறித்து அனைவரும் கவலை அளித்த நிலையில் தற்போது அது குறித்து வெங்கட் பிரபு பேசியிருக்கும் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரல் வருகிறது.

கோட் படத்தில் இளமை தோற்றத்தில் விஜய்

கோட் படத்தை பற்றிய அப்டேட்டை ரசிகர்கள் கேட்டு வந்த நிலையில் படத்தின் பாடல் வெளியிடப்பட்டு கலவையான விமர்சனங்கள் பெற்று வந்தது. இந்நிலையில் டிரெய்லர் வெளியிடுவதற்கு முன்பாக இளமை தோற்றத்தில் தோன்றும் விஜயின் ஒரு பாடல் வெளியாகி இருந்தது.

இந்தப் பாடலில் விஜயை பார்த்த அவரின் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பலரும் அதற்கு கருத்துக்கள் தெரிவித்து வந்தனர். மேலும் சமூக வலைத்தளங்களில் விஜயை ட்ரோல் செய்தும், மீஸ்கள் பதிவிட்டும் வந்தது குறிப்பிடத்தக்கது.

goat movie
Social Media Bar

இந்நிலையில் சாதாரணமாக விஜய்யை நடிக்க வைத்திருந்தால் கூட இளமையாக இருந்திருப்பார். இது தேவையில்லாத வேலை என்றும், இதற்காக ஏன் தொழில் நுட்பங்களை பயன்படுத்தினீர்கள்? எனவும் ரசிகர்கள் கோபமாக கருத்துக்களை பதிவிட்டு வந்த நிலையில், சிறிது நாட்களிலேயே விஜயின் இளமை தோற்றத்தை தொழில்நுட்பம் கொண்டு சரி செய்யப்படும் என்ற தகவலும் வெளிவந்தது.

செய்தியாளர்கள் சந்திப்பில் வெங்கட் பிரபு கூறியது

வெங்கட் பிரபு பேசுகையில், படத்தில் இளமையாக தோன்றும் விஜயின் ஒரு பாடல் வெளியாகி அது ரசிகர்களுக்கு இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தp இருந்தது. ஆனால் தற்போது டிரெய்லரில் பார்க்கும் இளமையான விஜய் முன்பு பாடலில் பார்த்த விஜயிலிருந்து மாற்றம் செய்யப்பட்டது. அந்தப் பாடலில் விஜயின் கன்னங்கள் ஒட்டி போய் இருப்பார். ஆனால் தற்போது தொழில்நுட்பத்தை கொண்டு விஜயை மாற்றி அமைத்திருக்கிறோம்.

venget prabu

பாடலில் வெளியான இளமை தோற்றத்தில் வந்த விஜய்யை பலரும் ட்ரோல் செய்த நிலையில், எனக்கு ஒரு விஷயம் புரிந்தது. விஜய்யின் இளமையான தோற்றத்தை தொழில் நுட்பங்களைக் கொண்டு மிகவும் கஷ்டப்படாமல் மேலோட்டமாக ஓரளவு சரி செய்தாலே போதுமானது என அப்பொழுது தோன்றியது .எனவே தான் பாடலில் வந்த விஜய்யை மாற்றி அமைத்து, தற்போது ட்ரெய்லரையும் மாற்றி புதியதாக வெளியிட்டு இருக்கிறோம். அதனால் தான் டிரெய்லர் வருவதற்கு தாமதமானது என அவர் தெரிவித்திருக்கிறார்.