Connect with us

ஹாலிவுட் படத்துல இருந்து காபி அடிச்சி தனுஷ்க்கு வச்சேன்! – மனம் திறந்த வெற்றி மாறன்!

Cinema History

ஹாலிவுட் படத்துல இருந்து காபி அடிச்சி தனுஷ்க்கு வச்சேன்! – மனம் திறந்த வெற்றி மாறன்!

cinepettai.com cinepettai.com

சினிமாவை பொறுத்தவரை ஒரு படத்தில் இருக்கும் காட்சியை எடுத்து தான் எடுக்கும் திரைப்படத்தில் வைப்பதை பல இயக்குனர்கள் செய்துள்ளனர். ஒரு படத்தை எப்படி திருட்டு ப்ரிண்டில் பார்ப்பவது தவறோ? அதே போல வேறு படத்தில் வரும் காட்சியை அப்படியே காபி அடிப்பதும் திருட்டுதான்.

தமிழில் பல இயக்குனர்கள் இந்த வேலையை செய்துள்ளனர். அதில் முக்கியமான இயக்குனர் அட்லீ. அட்லீ ஒரு படம் இயக்குகிறார் என்றால் அதில் பல காட்சிகள் வேறு படங்களில் இருந்து காபி அடிக்கப்பட்டதாக இருக்கும். மெர்சல் திரைப்படத்திலேயே நவ் யூ சி மீ, குட் டாக்டர் போன்றவற்றில் இருந்து காட்சிகளை எடுத்திருப்பார்.

ஆனால் இயக்குனர்களில் மிகவும் பிரபலமான வெற்றிமாறனும் கூட இந்த மாதிரியான விஷயத்தை ஆரம்பக்காலக்கட்டங்களில் செய்துள்ளார். தனுஷை வைத்து பொல்லாதவன் திரைப்படத்தை இயக்கி கொண்டிருந்த காலம். பொல்லாதவன் படத்தின் க்ளைமேக்ஸ் சீனை எப்படி எடுக்கலாம் என்பது குறித்து வெற்றி மாறனுக்கு பெரிதாக தெளிவு எதுவும் இல்லை.

எனவே அவர் ஹாலிவுட் திரைப்படமான அபகலிப்ஸ் என்கிற திரைப்படத்தில் வரும் சண்டையை காட்சியை அப்படியே காபி அடித்து தனது திரைப்படத்தில் வைத்திருந்தார். ஒரு பேட்டியில் வெற்றி மாறன் கூறும்போது அவரே இந்த நிகழ்வை கூறி அதற்காக வருத்தப்படுவதாக கூறியிருந்தார்.

POPULAR POSTS

vishal bailwan ranganathan
d imman sivakarthikeyan
vishal vijay
muniskanth
rajinikanth dil raj
To Top