Connect with us

அஜித்திற்கு ரெண்டு கதை சொன்ன இயக்குனர்! –  குழப்பத்தில் அஜித்!

Latest News

அஜித்திற்கு ரெண்டு கதை சொன்ன இயக்குனர்! –  குழப்பத்தில் அஜித்!

cinepettai.com cinepettai.com

அஜித் நடித்து தற்சமயம் வெளிவந்து பெரும் ஹிட் கொடுத்த திரைப்படம் துணிவு. இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து அஜித்தின் 62 வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருந்தார்.

ஆனால் சில பிரச்சனைகள் காரணமாக தற்சமயம் அஜித்தின் 62 வது திரைப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேணி இயக்குகிறார். மகிழ் திருமேணி தமிழ் சினிமாவில் இயக்கிய படங்கள் யாவும் சிறப்பான கதை களத்தை கொண்ட திரைப்படங்களாகும்.

மீகாமன், தடையற தாக்க, தடம், கலக தலைவன் ஆகியவை இதுவரை அவர் இயக்கிய திரைப்படங்களாகும். இந்த நிலையில் அஜித்தை சந்தித்த மகிழ் திருமேணி அவரிடம் இரண்டு கதைகளை கூறியுள்ளாராம்.

ஒரு கதை பேமிலி கதையில் ஆக்‌ஷன் கொண்ட கதையாம். அதிகப்பட்சம் ஃபேமிலி ஆடியன்ஸ்க்கு பிடிக்க கூடிய கதை. ஆனால் இரண்டாவது கதை ஒரு ஸ்பை கதையாம். ஏற்கனவே சர்தார் மாதிரியான படங்கள் ஹிட் அடித்திருப்பதால் ஸ்பை திரைப்படங்களுக்கும் இங்கு வரவேற்பு இருந்து வருகிறது.

இந்த இரண்டு கதைகளுமே அஜித்திற்கு பிடித்துவிட்டது. இதனால் இதில் எந்த கதையை தேர்ந்தெடுப்பது என்பதிலேயே அவருக்கு நிறைய குழப்பங்கள் உள்ளன. இதனால்தான் அஜித் 62 திரைப்படம் குறித்து எந்த ஒரு தகவலும் இன்னும் வரவில்லை என கூறப்படுகிறது.

POPULAR POSTS

ajith
vengatesh bhatt
MGR jayalalitha
blue sattai maaran vijay antony
lokesh kangaraj raghava lawarance
vanitha arun vijay
To Top