விடுதலை 2 திரைப்படத்திற்கு பிறகு வெற்றிமாறன் வாடிவாசல் திரைப்படத்தை இயக்க இருந்தார். ஆனால் நடிகர் சூர்யாவிற்கு அந்த சமயத்தில் கால்ஷீட் இல்லை என்கிற காரணத்தினால் அடுத்ததாக நடிகர் சிம்புவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க துவங்கியிருக்கிறார் வெற்றிமாறன்.
இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தானு தயாரித்து வருகிறார். ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கிய அசுரன் திரைப்படம் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் வெளியான திரைப்படம்தான்.
இந்த நிலையில் சிம்பு திரைப்படத்தைப் பொறுத்தவரை குறைந்த பட்ஜெட்டில் அந்த படத்தை எடுக்க வேண்டும் என்பதுதான் தலைப்புலி எஸ் தாணுவின் எண்ணமாக இருந்தது. ஆனால் வெற்றிமாறன் ஆரம்பத்திலேயே பெரிய பட்ஜெட் படமாக இதை கொண்டு வந்து விட்டார்.
இந்த நிலையில் படத்தின் பட்ஜெடை குறைக்க வேண்டும் என்று கலைப்புலி எஸ் தாணு கூறிய காரணத்தினால் படப்பிடிப்பு துவங்கப்படாமலேயே இருந்தது. வேறு தயாரிப்பாளர்கள் வெற்றிமாறனுக்கு வாய்ப்புகளை வழங்கி உள்ளனர்.
ஆனாலும் கூட கலைப்புலி எஸ் தாணுவிடம் அட்வான்ஸ் தொகை வாங்கிய காரணத்தினால் அவருக்குதான் படம் பண்ணுவேன் என்று நிராகரித்து விட்டார் வெற்றி மாறன். இந்த நிலையில் தற்சமயம் இது குறித்து பேச்சுவார்த்தை சென்று கொண்டு உள்ளது.