தமிழ் சினிமாவில் பிரபல நடிகரும், இசையமைப்பாளருமாக இருந்து வருபவர் விஜய் ஆண்டனி. ஒரு நடிகர் என்பதையும் தாண்டி சமூக பொறுப்புடன் பல விஷயங்களை செய்து வருகிறார் விஜய் ஆண்டனி. பிச்சைக்காரன் 2 வெளியானபோது மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் புற்றுநோய் நோயாளிகளுக்கு உதவி செய்ய முன் வந்தார்.
அவரது மகள் மீரா விஜய் ஆண்டனி. இவருக்கு 16 வயதாகிறது சென்னையில் உள்ள சர்ச் பார்க் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்றைய தினம் 3 மணி அளவில் இவர் தற்கொலை செய்துக்கொண்டார். அதிகப்படியான மன அழுத்தமே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
இந்த நிகழ்வால் விஜய் ஆண்டனியின் குடும்ப கதிகலங்கி உள்ளது. அவர்களுக்கு அமைதி கிடைக்க இறைவனை பிராத்திப்போம்.