ராஜ்கிரண் இல்லனா அந்த படத்துல நடிக்கிறேன்? ,நல்ல பட வாய்ப்பை தவறவிட்ட விஜய்.! – எந்த படம் தெரியுமா?

தமிழ் சினிமாவில் பெரும் நட்சத்திரங்களாக இருந்த நடிகர்கள் சிலர் வேண்டாம் என ஒதுக்கிய பல கதைகள் அவர்கள் எதிர்ப்பார்த்தை விடவும் பெரிய ஹிட் கொடுத்துள்ளன.

அப்படி விஜய் ஒதுக்கிய ஒரு திரைப்படம்தான் சண்டக்கோழி. லிங்குசாமி சண்டக்கோழி திரைப்படத்தின் கதையை எழுதி முடித்ததும் முதலில் விஜய்யைதான் போய் பார்த்தாராம். ஏனெனில் இந்த கதை விஜய்க்கு நன்றாக இருக்கும் என கருதினாராம் லிங்குசாமி.

விஜய்யை சந்தித்த லிங்குசாமி படத்தின் கதையை கூறியுள்ளார். முதல் பாதியை கேட்டதும் விஜய்க்கு இந்த கதை மிகவும் பிடித்துவிட்டதாம். ஆனால் அடுத்த பாதியை சொல்ல துவங்கியவுடன் விஜய்க்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதாம்.

மாஸ் ஹீரோக்கள் பொதுவாக அவர்கள் நடிக்கிற திரைப்படத்தில் அவர்கள் மட்டுமே மாஸாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள். ஆனால் சண்டக்கோழி திரைப்படத்தில் கதாநாயகனை விடவும் மாஸான கதாபாத்திரத்தில் ராஜ்கிரண் வருவார்.

இதனால் ராஜ்கிரண் கதாபாத்திரத்தை நீக்கினால் நான் நடிக்கிறேன் என கூறினாராம் விஜய். ஆனால் ராஜ்கிரண் கதாபாத்திரம் படத்திற்கு மிக முக்கியம் என்பதால் அந்த படத்தை விஷாலை வைத்து இயக்கினார் லிங்குசாமி.

படம் வெளியான பிறகு அவரிடம் பேசிய விஜய் “இந்த திரைக்கதை இப்படி இருப்பதுதான் சரி” என கூறியுள்ளார். ஒருவேளை இந்த படத்தில் விஜய் நடித்திருந்தால் அவருக்கு இது ஒரு முக்கியமான திரைப்படமாக இருந்திருக்கும்.

Follow @ Google News: சினிபேட்டையில் வரும் அனைத்து சினிமா அப்டேட்களையும் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிபேட்டை தளத்தை ஃபாலோ செய்யவும்.

Refresh