தமிழில் மம்முட்டி, விஜய் சேதுபதி கூட்டணியில் படம்.! – இயக்குனர் யார் தெரியுமா?

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் ஒரு ஐக்கானிக் நடிகராக இருக்கிறார். வில்லனாக நடித்தாலும், ஹீரோவாக நடித்தாலும் அவரை மக்கள் ரசிக்கும் அளவில் படத்தில் தனது நடிப்பை வெளிப்படுத்திவிடுகிறார். 

அதே போல மலையாளத்தில் ஒரு சிறந்த நடிகராக நடிகர் மம்முட்டி இருக்கிறார். ஏற்கனவே பல தமிழ் படங்களில் நடித்தவர் மம்முட்டி. மேலும் சரளமாக தமிழ் பேசக்கூடியவர், இவர் நடித்த அம்பேத்கர் திரைப்படம் இவரது சிறப்பான நடிப்பிற்கு ஒரு உதாரணமாகும்.

இந்த நிலையில் இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்தால் அது எப்படிப்பட்ட காம்போவாக இருக்கும்? அப்படி ஒரு படம் தயாராக இருக்கிறது. இந்த படத்தை தமிழில் கடைசி விவசாயி திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் மணிகண்டன் இயக்க உள்ளார்.

கடைசி விவசாயி ஒரு உலக தரம் வாய்ந்த படமாக அமைந்ததால் இவருக்கும் கூட தமிழ் சினிமாவில் வரவேற்பு உள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படம் ஒரு நல்ல படமாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Refresh