மகனுக்காக களத்தில் இறங்கிய விஜய் சேதுபதி… இதுதான் காரணமா?

நடிகர் விஜய் சேதுபதியின் மகனான சூர்யா தமிழ் சினிமாவின் மீது அதிக ஆர்வம் கொண்டவராக இருந்து வருகிறார். இவர் கதாநாயகனாக பீனிக்ஸ் என்கிற ஒரு திரைப்படத்தில் நடித்தார்.

ஆனால் அந்த திரைப்படம் பெரிதான ஒரு வரவேற்பை பெறவில்லை. இருந்தாலும் ஒரு கலவையான விமர்சனத்தை அந்த திரைப்படம் பெற்றுக் கொடுத்தது.

மேலும் அந்த திரைப்படம் மூலமாக மக்கள் மத்தியில் அதிக பிரபலம் அடைந்தார் சூர்யா. முதல் படத்தை பொருத்தவரை விஜய் சேதுபதி சூர்யாவிற்கு எந்த ஒரு உதவியும் செய்யவில்லை. ஆனால் இரண்டாவது திரைப்படத்திற்கு விஜய் சேதுபதியே உதவி செய்ய வந்துள்ளதாக கூறப்படுகிறது.

Social Media Bar

பீனிக்ஸ் திரைப்படத்திற்கு பிறகு சூர்யா அடுத்து நடிக்க இருக்கும் திரைப்படத்தின் கதையை விஜய் சேதுபதி தான் தேர்ந்தெடுக்க இருக்கிறாராம். மேலும் அந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதியும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்து சினிமா வட்டாரத்தில் ஒரு பேச்சும் உள்ளது அதாவது சூர்யாவிற்கு உண்மையிலேயே சினிமாவின் மீது ஆர்வம் உள்ளதா தனியாக விட்டால் அவர் சினிமாவில் சாதித்து காட்டுவாரா? என்பதை சோதிக்கவே விஜய் சேதுபதி முதல் திரைப்படத்திற்கு எந்த ஒரு உதவியும் செய்யவில்லை.

ஆனாலும் கூட சூர்யா ஆர்வம் குறையாமல் முதல் படத்தில் கதாநாயகனாக நடித்து அந்த படமும் வெளியானது. அதனை தொடர்ந்து இப்பொழுது விஜய் சேதுபதி அவருக்கு உதவி செய்ய முன்வந்துள்ளார் என்று கூறப்படுகிறது.