Bigg Boss Tamil
சாதி வெ*யனா இருந்த ரஞ்சித் தான் உண்மையா? மறைமுகமா கேட்ட விஜய் சேதுபதி.. ஆடிப்போன ரஞ்சித்.!
பிக் பாஸில் உள்ள போட்டியாளர்கள் வரிசையில் தற்சமயம் முக்கிய போட்டியாளராக களமிறங்கி இருக்கிறார் நடிகர் ரஞ்சித். நடிகர் ரஞ்சித் பல காலங்களாகவே தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் அவருக்கு தற்சமயம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இவர் உள் நுழைந்த உடனே விஜய் சேதுபதி இவரை குறித்து சில கேள்விகளை கேட்டார்.
அதில் விஜய் சேதுபதி கூறும் பொழுது உங்களை நான் சிறுவயதிலிருந்தே பார்த்து வருகிறேன். உங்களது இயக்கத்தில் ஆரம்பத்தில் ஒரு திரைப்படம் வந்தது. பீஷ்மன் என்கிற அந்த திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம்.
மிகவும் நன்றாகவும் இருந்தது. ஆனால் அப்போது பார்த்த ரஞ்சித்திற்கும் இப்போது உள்ள ரஞ்சித்திற்கும் வித்தியாசம் தெரிகிறது. இப்பொழுது நிறைய பேட்டிகளில் நீங்கள் சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசுவதை நான் பார்க்கிறேன்.
விஜய் சேதுபதி கேட்ட கேள்வி:
நான் பார்த்த ரஞ்சித் அது கிடையாது அது அதிக அன்புடன் அனைவரிடமும் பழகும் பாசமான ஒரு ரஞ்சித்தாக இருந்தீர்கள். இப்பொழுது இருக்கும் இந்த ரஞ்சித் உண்மையா? அல்லது அப்பொழுது என்னிடம் பழகிய அந்த ரஞ்சித் உண்மையா என்று கேட்டிருந்தார் விஜய் சேதுபதி.
சமீபத்தில் ரஞ்சித் இயக்கத்தில் கவுண்டம்பாளையம் என்கிற திரைப்படம் வந்தது இது குறிப்பிட்ட சாதியை பெருமைப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்ட திரைப்படம் என்று கூறப்படுகிறது. அதை தான் மறைமுகமாக விஜய் சேதுபதி கேட்டிருந்தார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ரஞ்சித், சார் நீங்க பார்த்த பழைய ரஞ்சித் தான் உண்மை இப்பொழுது இந்த மாதிரி செய்த காரணத்தினால் பல விஷயங்களை இழந்திருக்கிறேன் இப்பொழுது அது குறித்து வருத்தப்படுகிறேன் என்று கூறியிருக்கிறார் ரஞ்சித்.