News
வாரிசு படத்தை தெலுங்கில் யாரும் தடை பண்ண முடியாது? – கெத்து காட்டிய தயாரிப்பாளர்.!
விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படமானது வருகிற பொங்கலை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கியுள்ளார்.
படத்திற்கு விஜய் ரசிகர்களிடையே அதிக வரவேற்பு இருந்து வருகிறது. ஏனெனில் வாரிசு படத்திற்கு போட்டியாக அஜித் நடிக்கும் துணிவு படம் வெளிவர இருக்கிறது.

வாரிசு படம் முக்கியமாக தெலுங்கு ரசிகர்களை டார்கெட் செய்து எடுக்கப்பட்டதாகும். அதனால்தான் படத்தின் இயக்குனர், இசையமைப்பாளர், கதாநாயகி என அனைவருமே தெலுங்கில் பிரபலமாக உள்ளவர்களை வைத்து படத்தை உருவாக்கி உள்ளனர்.
இந்நிலையில் இங்கு பொங்கல் கொண்டாடுவது போல ஆந்திராவில் சங்கராந்தி என்ற பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். இந்த சமயங்களில் அவர்கள் வெளி மாநில படங்களை வெளியிடுவதில்லை. எனவே வாரிசு படத்தை தெலுங்கில் வெளியிட முடியாது என கூறியிருந்தனர்.

இந்நிலையில் தெலுங்கில் பல தயாரிப்பாளர்கள் சங்கம் உள்ளது. அதில் ஒரு முக்கியமான தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக தயாரிப்பாளர் தில்ராஜ் இருக்கிறாராம். இங்கே ரெட் ஜெயண்ட் ஸ்டுடியோஸ் போல தெலுங்கில் தில்ராஜ் மிகவும் முக்கியமான நபர் என கூறப்படுகிறது.
அவர் நினைத்தால் எந்த ஒரு படத்தையும் வெளியிடுவார் என கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் தயாரித்த படம்தான் வாரிசு. எனவே வாரிசு படம் கண்டிப்பாக தெலுங்கில் வெளியாகும் என கூறப்படுகிறது.
