Connect with us

வாரிசு படத்தின் ட்ரைலர் எப்போ? – புது அப்டேட்!

News

வாரிசு படத்தின் ட்ரைலர் எப்போ? – புது அப்டேட்!

Social Media Bar

இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வருகிற பொங்கலுக்கு திரையில் வெளிவர இருக்கும் திரைப்படம் வாரிசு. இந்த படத்திற்காக தளபதியின் ரசிகர்கள் வெகுவாக காத்துக்கொண்டுள்ளனர்.

ஏனெனில் பொங்கலுக்கு இதனுடன் அஜித் நடித்த துணிவு படம் போட்டி போட உள்ளது. இந்த நிலையில் நேற்று முன் தினம் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா ஆரவாரமாக நடந்தது.

தளபதி பல விஷயங்களை ரசிகர்களிடையே பகிர்ந்துக்கொண்டார். இதனுடன் சேர்த்து வாரிசு படத்தின் அனைத்து பாடல்களும் அன்று வெளியானது.

இதனை தொடர்ந்து வாரிசு படத்தின் ட்ரைலர் வருகிற 31 ஆம் தேதி மாலை 6 மணியளவில் நியூ இயரை முன்னிட்டு வெளியாகும் என தகவல்கள் வந்துள்ளன.

ஆனால் படக்குழு இன்னும் உறுதியாக அறிவிக்கவில்லை. ஆனாலும் ட்ரைலர் 31 ஆம் தேதி வருவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.

Articles

parle g
madampatty rangaraj
To Top