மிஷ்கின் எனக்கு பண்ணுன துரோகத்தை மன்னிக்கவே முடியாது!. – மனம் உடைந்த விஷால்

தமிழில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஷால். செல்லமே திரைப்படம் மூலமாக அறிமுகமான விஷாலுக்கு முக்கியமான திரைப்படமாக சண்டக்கோழி படம் அமைந்தது. அதற்கு பிறகு நிறைய பட வாய்ப்புகளை பெற துவங்கினார் விஷால்.

ஆனால் சமீபமாக அவர் நடித்த எனிமி, வீரமே வாகை சூடும், லத்தி போன்ற படங்கள் எதுவும் அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை. இதனை தொடர்ந்து அடுத்ததாக துப்பறிவாளன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை வெளியிட திட்டமிட்டு வருகிறார்.

ஏற்கனவே துப்பறிவாளன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பின்போதே இயக்குனர் மிஷ்கினுக்கும் விஷாலுக்குமிடையே சண்டை ஏற்பட்டது. மிஸ்கின் அதிக சம்பளம் கேட்டதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த படத்தின் படப்பிடிப்பு நின்றுப்போனது.

மேலும் ஒரு மேடையில் பேசிய மிஸ்கின் விஷாலை திட்டி மிக மோசமாக பேசினார். இந்த நிலையில் அதற்கு எந்த பதிலும் கூறாமல் இருந்த விஷால் இடையில் ஒரு பேட்டியில் பேசும்போது “ஒரு நடிகராக எனக்கு தெரிந்து மிஸ்கின் சிறப்பான இயக்குனர். ஆனால் ஒரு தயாரிப்பாளராக பார்க்கும்போது மிஸ்கின் மாதிரி மோசமான ஒருவரை நான் பார்த்ததில்லை. அவர் எனக்கு செய்த துரோகத்தை மன்னிக்கவே மாட்டேன் என கூறியுள்ளார் விஷால்.

Popular News

Categories

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.