Connect with us

கருப்பன்ன சாமியால் படப்பிடிப்பே நின்னு போயிடுச்சு!.. விஷாலை மிரள வைத்த சம்பவம்..

Cinema History

கருப்பன்ன சாமியால் படப்பிடிப்பே நின்னு போயிடுச்சு!.. விஷாலை மிரள வைத்த சம்பவம்..

cinepettai.com cinepettai.com

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஷால். விஷால் நடிக்கும் திரைப்படங்களுக்கு பெரிய பார்வையாளர்கள் இல்லாவிட்டாலும் கூட குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் அவருக்கு ஓரளவு மார்க்கெட் இருந்து வருகிறது.

தற்சமயம் இவர் நடித்துள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் கதை மூன்று காலக்கட்டங்களில் நடக்கிறது. இந்த படத்தின் ட்ரைலர் வெளியானது முதலே மக்கள் மத்தியில் திரைப்படம் குறித்து அதிக ஆர்வம் இருந்து வருகிறது.

இந்த படத்திற்கு வந்த வரவேற்பு காரணமாக சந்திரமுகி 2 திரைப்படத்தையே தேதி மாற்றி வைத்துவிட்டனர். படம் குறித்து பேட்டியில் பேசும்போது விஷால் படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்றை விளக்கியிருந்தார்.

படப்பிடிப்பு நடக்கும்போது அதில் கருப்பன்ன சாமி குறித்து பாடல் ஒன்று இடம் பெற்றதாம். அதை படமாக்குவதற்காக ஒரு கருப்பன்ன சாமி சிலையை செய்துள்ளனர். இந்த சிலையை சீக்கிரம் செய்யவே முடியவில்லையாம். பிறகு கோழி வெட்டி காவு கொடுத்து பூசை செய்த பிறகுதான் சிலையை செய்ய முடிந்ததாம்.

அதே போல நடிகர் விஷாலுக்கும் படப்பிடிப்பின்போது சாமி வந்துவிட்டது என அவர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

POPULAR POSTS

mankatha
top cook dupe cook
vijay sun tv
ajith fans
gv prakash
vijayakanth 2
To Top