முத்தழகு கதாபாத்திரத்தை நானே நெனச்சாலும் திரும்ப செய்ய முடியாது!.. பருத்திவீரன் பற்றி பேசிய ப்ரியாமணி!..

Cinema History News Tamil Cinema News

தமிழ் சினிமாவில் கிராமத்தை கதைகளமாக கொண்டு சிறப்பான வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் பாரதிராஜா. பாரதிராஜாவிற்கு பிறகு கிராமத்து கதைகள் என்பது தமிழ் சினிமாவில் குறைந்தது. ஏனெனில் கிராமத்து கதைகளை எடுத்து தமிழ் சினிமாவில் யாராலும் பெரும் ஹிட் கொடுக்க முடியவில்லை.

அந்த நிலையில் மீண்டும் கிராமிய படங்கள் வருவதற்கு ஒரு தொடக்கமாக இருந்த திரைப்படம் பருத்திவீரன். கார்த்தி, ப்ரியாமணி, இயக்குனர் அமீர் மூவருமே தங்களின் முழு திறமையையும் அந்த படத்தில் காட்டி இருப்பர். ப்ரியாமணிக்கு அந்த திரைப்படம் தேசிய விருதை பெற்று தந்தது.

அதன் பிறகு அவர் மிகவும் பிரபலமானார். தற்சமயம் மீண்டும் தொடர்ச்சியாக படங்களில் நடித்துள்ளார் ப்ரியாமணி. ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்சமயம் ஒரு பேட்டியில் இவர் பருத்திவீரன் திரைப்படத்தை பற்றி கூறும்போது அதில் இருந்த முத்தழகு கதாபாத்திரத்தை மறுபடி ஒருமுறை நடிக்க சொன்னாலும் என்னால் நடிக்க முடியாது.

 அதே போல கார்த்தியாலும் மறுபடி அந்த மாதிரி நடிக்க முடியுமா என தெரியவில்லை. எனவே எனது சினிமா வாழ்க்கையில் பருத்திவீரன் முத்தழகு கதாபாத்திரம் ஒரு க்ளாசிக்கான கதாபாத்திரமாக இருக்கும் என கூறியுள்ளார் ப்ரியாமணி.