எவ்வளவு முயற்சி பண்ணியும் ரஜினியை முந்த முடியலையே!.. லியோ ஒரு வார வசூல்!..

leo vijay jailer rajini

வெளியான முதல் வாரம் முதலே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் லியோ. விஜய் நடித்து வெளியான லியோ திரைப்படம் இதுவரை இந்தியாவில் முதல் நாள் வசூல் படைத்த அனைத்து திரைப்படங்களையும் மிஞ்சி பெரும் வசூலை கொடுத்தது.

அதனை தொடர்ந்து நிச்சயமாக இந்த திரைப்படம் ஜெயிலர் திரைப்படத்தின் வசூலை தாண்டி ஒரு வசூலை கொடுக்கும் என்று மக்கள் மத்தியில் ஒரு வரவேற்பு இருந்தது ஆனால் இந்த பணம் அப்படியான ஒரு வசூலை கொடுக்கவில்லை.

லியோ திரைப்படம் சில நாட்களிலேயே வரவேற்பை இழந்தது தற்சமயம் திரையரங்குகளில் அவ்வளவாக இந்த படத்திற்கு கூட்டம் இல்லை என்று கூறப்படுகிறது.

எனவே தளபதி ரசிகர்கள் மூலம் வந்த வசூல் மட்டுமே முதலில் பெரிதாக தெரிந்துள்ளது. அதற்கு பிறகு உள்ள வசூல் குறைவாகவே இருந்திருக்கிறது என பேசப்படுகிறது. இந்த நிலையில் இதுவரை தமிழ் சினிமாவில் ஒரு வாரத்தில் அதிக வசூல் கொடுத்த திரைப்படமாக ரஜினி நடித்த 2.0 என்கிற திரைப்படம் தான் இருந்து வருகிறது.

அந்த வசூலை லியோ தாண்டுமா என்ற கேள்வி இருந்தது. மொத்தமாக முதல் வாரத்தில் 500 கோடிக்கு ஓடி இருந்தது 2.0. ஆனால் லியோ திரைப்படம் தற்சமயம் முதல் வாரத்தில் 461 கோடிதான் வசூல் செய்துள்ளது.

கிட்டத்தட்ட ரஜினி படத்திற்கு நெருக்கமாக இந்த வசூல் இருப்பதால் இதுவும் பெரிய விஷயம்தான் என்று பேசப்பட்டாலும் ரஜினி படத்தின் வசூலை லியோவால் தாண்ட முடியவில்லை என்பதே உண்மை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *