ரஜினி உங்களை எல்லாம் நாய்ன்னு சொல்லி திட்டுறாரே.. ஏன் கோபம் வரல!.. கடுப்பான பத்திரிக்கையாளர்!.
Rajinikanth Speech about Jailer : தமிழ் சினிமா நட்சத்திரங்களில் என்றுமே சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் ஒரே நடிகர் ரஜினிகாந்துதான். ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படங்களுக்கு எப்போதுமே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருப்பதை பார்க்க முடிகிறது.
தமிழில் அதிக வசூல் படைத்த முதல் 10 படங்களில் ரஜினிகாந்தின் திரைப்படங்களும் இருக்கின்றன. அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் தொடர்ந்து தனது பட்டத்தை தக்க வைத்து கொள்ள அவர் போராடி வருகிறார்.

இந்த நிலையில் ரஜினிகாந்தின் சூப்பர் ஸ்டார் பட்டத்துக்காக இடையில் பெரிய பஞ்சாயத்து நடந்தது பலரும் அறிந்த விஷயமே. விஜய், சிவகார்த்திகேயன் மாதிரியான நடிகர்கள் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஆசைப்படுகிறார்கள் என தெரிந்தததும் தனது ஜெயிலர் படத்தில் பட்டத்தை தூக்க 100 பேரு என நேரடியாக தாக்கியிருந்தார் ரஜினிகாந்த்.
இந்த நிலையில் இதுக்குறித்து பத்திரிக்கையாளர் பேசும்போது ஜெயிலர் வெற்றி விழாவில் 50 நிமிடம் வரை பேசினார் ரஜினிகாந்த். அதில் ஒரு காகா கதை சொன்னார் என்று அனைவரும் சர்ச்சையாக்கினார்கள். ஆனால் சமூக வலைத்தளங்களில் பேசுபவர்களை அவர் நாய் என கூறினார். அதில் பத்திரிக்கைகாரர்களும்தான் அடங்கும். இந்த பேச்சு தொடர்பாக ஏன் யாருக்குமே கோபம் வரவில்லை என கேட்டிருந்தார் அவர்.