Saturday, May 30, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
vijayakanth

vijayakanth

உதவி இயக்குனர்னா கேவலமா போச்சா!.. கண்ணு முன்னாடி நிக்காத!.. கடுப்பான கேப்டன் விஜயகாந்த்!..

by Raj
December 29, 2023
in Cinema History, News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Captain Vijayakanth: தமிழ் சினிமாவில் எந்த ஒரு நடிகரும் எதிர்மறையாக பேச முடியாத அளவிற்கு சிறப்பான மனிதராக வாழ்ந்தவர் கேப்டன் விஜயகாந்த். அதுவும் உணவு விஷயத்தில் அனைவருக்கும் வாரி வழங்கும் வள்ளலாகதான் இருந்தார் விஜயகாந்த்.

சினிமாவிற்கு வந்த ஆரம்பக்கட்டத்தில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக சில படங்களில் பணிப்புரிந்தார் விஜயகாந்த். ஜுனியர் ஆர்ட்டிஸ்ட்டுக்கு எல்லாம் எந்த நிலையில் உணவு வழங்குவார்கள் என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை. அந்த மோசமான உணவை உண்டப்போது விஜயகாந்த் ஒரு முடிவெடுத்தார். நல்ல நிலையை அடைந்த பிறகு அனைவருக்கும் நல்ல உணவு அளிக்க வேண்டும்.

Read More:  கமலஹாசனின் கனவுத் திரைப்படம் 'மருதநாயகம்' - 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

அதை அப்படியே செய்தவர் விஜயகாந்த். ஒருமுறை படப்பிடிப்பிற்கு விஜயகாந்தை பார்க்க ஆறு பேர் வந்திருந்தனர். அவர்களுக்கு உணவளித்து அனுப்பி வைத்தார் விஜயகாந்த். அந்த நிறுவனத்தை பொறுத்தவரை படப்பிடிப்பில் எத்தனை நபர்கள் இருக்கிறார்களோ அவர்களுக்கு மட்டும்தான் உணவு இருக்கும். இதனால் உணவு தட்டுபாடு ஏற்பட விஜயகாந்த் நண்பர்களுக்கு உணவளிக்கவா படப்பிடிப்பு நடத்துகிறோம் என கேட்டுள்ளார் தயாரிப்பாளர்.

இந்த விஷயம் விஜயகாந்தின் காதுக்கு சென்றுவிட அதன் பிறகு படப்பிடிப்பு முடியும் வரை அங்கு விஜயகாந்த் உணவு உண்ணவே இல்லையாம். அதே போல ஒரு சம்பவம் கஜேந்திரா திரைப்படத்தின் படப்பிடிப்பிலும் நடந்துள்ளது.

Read More:  எஸ்.ஜே.சூர்யாவின் 'இரவாகாலம்' - டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

கஜேந்திரா திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் பொறுமையாக சென்றுக்கொண்டிருந்தது. இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவிற்கு உதவி இயக்குனராக இருவர் பணிப்புரிந்து வந்தனர். அந்த இருவரும் தினமும் மதிய வேளையில் உணவு உண்ணாமல் இருந்துள்ளனர். இந்த விஷயத்தை கவனித்த விஜயகாந்த் அவர்களை அழைத்து என்ன பிரச்சனை என கேட்டுள்ளார்.

vijayakanth
vijayakanth

படப்பிடிப்பு தாமதமாக நடக்கிறது எல்லாம் சோறு திங்க மட்டும் படப்பிடிப்புக்கு வருகிறீர்களா என உதவி இயக்குனர்களை தயாரிப்பாளர் திட்டியுள்ளார். அது முதல் அவர்கள் அங்கு உணவு உண்ணுவதில்லை. இதை விஜயகாந்திடம் அவர்கள் சொன்னப்போது விஜயகாந்த் கடும் கோபம் கொண்டார். தயாரிப்பாளரை அழைத்து இப்படியெல்லாம் பேச உனக்கு என்ன உரிமை இருக்கு.

Read More:  விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

இனிமே நானும் இங்கே சாப்பிட மாட்டேன், என் கண் முன்னே நிக்காதீங்க என சத்தம் போட்டார் விஜயகாந்த். பிறகு அவர்கள் மூவருக்கும் மட்டும் தினசரி வீட்டில் இருந்தே உணவு கொண்டு வரப்பட்டது.

Tags: kajendratamil cinemavijayakanthகஜேந்திராதமிழ் சினிமாவிஜயகாந்த்
Previous Post

விஜயகாந்திற்கு கேப்டன் என்கிற பெயர் எப்படி வந்தது தெரியுமா? இதுதான் காரணம்!..

Next Post

இறந்த பின்னும் வாழ்பவர் கேப்டன்!.. விஜயகாந்த் சார்பில் நடிகருக்கு சென்ற உதவித்தொகை!..

Related Posts

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026
வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026
Next Post
vijayakanth bonda mani

இறந்த பின்னும் வாழ்பவர் கேப்டன்!.. விஜயகாந்த் சார்பில் நடிகருக்கு சென்ற உதவித்தொகை!..

Recent Updates

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026
வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026
எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026
சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved