அடுத்த படத்திற்கு அதிக சம்பளம் வேண்டும்!.. விஜய் சம்பளம் உயர்த்திட்டா போதும்.. துண்டை போட்ட அஜித்!..

Actor Ajith : பொதுவாக சினிமாவை பொருத்தவரை ஒரு நடிகருக்கான அங்கீகாரம் என்பது அவருடைய சம்பளத்தை பொறுத்தே முடிவு செய்யப்படுகிறது. அதிகமான சம்பளம் வாங்கும் நடிகர்கள் தமிழில் டாப் நடிகர்கள் என்று அறியப்படுகின்றனர்.

எனவே போதுமான அளவு சம்பளம் வாங்கினால் கூட தங்களது தரத்தை காட்டிக் கொள்வதற்காகவே அதிக சம்பளம் வாங்குகின்றனர் முக்கிய நடிகர்கள். அந்த வகையில் தற்சமயம் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கும் GOAT திரைப்படத்திற்கு 200 கோடி சம்பளமாக வாங்குவதாக கூறப்பட்டிருந்தது.

விஜய் நூறு கோடி சம்பளமாக வாங்கிக் கொண்டிருந்த காலகட்டத்தில் நடிகர் அஜித் எண்பது கோடி சம்பளமாக வாங்கிக் கொண்டு இருந்தார். இந்த நிலையில் விஜய் 150 கோடி சம்பளத்திற்கு உயர்ந்த பிறகு அஜித்தும் 110 கோடி சம்பளம் வாங்கி வந்தார் என்று கூறப்படுகிறது.

ajith
Social Media Bar

ஒவ்வொரு முறை விஜய் சம்பளத்தை உயர்த்தும் பொழுதும் விஜய்க்கு அடுத்து பெரும் நடிகராக இருப்பவர் அஜித் என்பதால் அவரும் தனது சம்பளத்தை உயர்த்தி வருகிறார். அந்த வகையில் தற்சமயம் விஜய் 200 கோடிக்கு சம்பளத்தை உயர்த்தி இருப்பதால் அஜித் 163 கோடியை சம்பளம் கேட்கிறாராம்.

ஆனால் விஜய் அளவிற்கு அஜித்திற்கு படங்கள் வெற்றி கொடுப்பதில்லை விஜய்யின் திரைப்படங்கள் 400 கோடி வரை ஓடுகின்றன. ஆனால் அஜித்தின் திரைப்படங்கள் 250 கோடியை தாண்டுவதில்லை எனவே அவருக்கு இந்த சம்பளம் கொடுக்க முடியாது என்று பேச்சுக்களெல்லாம் இருந்த பொழுதும் அடுத்து அஜித் நடிக்கும் திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். அவர் ஏற்கனவே இயக்கிய மார்க் ஆண்டனி திரைப்படம் நல்ல வெற்றியை கொடுத்ததால் இதுவும் நல்ல வெற்றியை கொடுக்கும் என்கிற நம்பிக்கையில் தயாரிப்பாளர்கள் அந்த சம்பளத்தை ஒப்பு கொண்டுள்ளனர்.