கடைசியில் ஜெயித்த பக்தர்கள்.. அன்னப்பூரணி படத்துக்கு வந்த நிலைமை!.. வருத்தத்தில் நெட்ஃப்ளிக்ஸ்..

Nayanthara annapoorani : சமீபத்தில் நடிகை நயன்தாரா நடிப்பில் வெளிவந்து பெரும் தோல்வியை கண்ட திரைப்படம் அன்னப்பூரணி. இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 12 கோடிக்கு எடுக்கப்பட்டது. ஆனால் 1 கோடி கூட வசூல் செய்யவில்லை. இந்த படத்தில் நயன்தாரா பிராமண வீட்டு பெண்ணாக நடித்திருப்பார்.

பெருமாளுக்கு தளிகை போடும் குடும்பத்தில் பிறந்த அன்னப்பூரணிக்கு பெரும் சமையல் மாஸ்டராக வேண்டும் என்பது கனவாக இருக்கும். ஆனால் அப்படி ஆவதாக இருந்தால் அவர் அசைவ சாப்பாடுகளை சமைக்க வேண்டி இருக்கும். இருந்தாலும் அதை எல்லாம் எதிர்த்து நயன் தாரா எப்படி சாதிக்கிறார் என்பதே கதை.

Social Media Bar

இந்த படத்தில் நயன்தாரா அசைவம் சாப்பிடுவது போல காட்சிகள் இருந்தன. அதே போல அவர் பிரியாணி செய்வதற்காக தொழுகை செய்வது போலவும் காட்சிகள் இருந்தன. இப்படியான இன்னும் சில காட்சிகள் இந்து பக்தர்கள் சிலருக்கு கோபத்தை ஏற்படுத்தின.

இதனையடுத்து ஒரு இந்து அமைப்பினர் இந்த படத்திற்கு தடை விதிக்குமாறு வழக்கு தொடர்ந்தனர். படம் வெளியாகி திரையரங்கில் ஓடியப்போது பலரும் பார்க்காததால் படத்தில் இப்படியான காட்சிகள் இருந்தது தெரியவில்லை. ஆனால் நெட்ஃப்ளிக்ஸில் வெளியான பிறகே இந்த விஷயம் தெரிந்து வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த நிலையில் அன்னப்பூரணி திரைப்படத்தை தனது தளத்தில் இருந்து நீக்கியுள்ளது நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம். மேலும் படத்தில் சர்ச்சையான காட்சிகளை நீக்கி மீண்டும் படத்தை பதிவிடுவோம் என நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.