Connect with us

விக்கு செய்றதுக்கு அம்பாதாயிரம்!.. கிராபிக்ஸ் வேலைக்கு 5 லட்சம்!.. சத்யராஜ் படத்தில் நடந்த சம்பவம்.. அட கொடுமையே!..

sathyaraj

Latest News

விக்கு செய்றதுக்கு அம்பாதாயிரம்!.. கிராபிக்ஸ் வேலைக்கு 5 லட்சம்!.. சத்யராஜ் படத்தில் நடந்த சம்பவம்.. அட கொடுமையே!..

cinepettai.com cinepettai.com

Sathyaraj: தமிழ் சினிமாவில் கதாநாயகனாக மட்டுமல்லாமல் வில்லன் காமெடி நடிகர் என்று பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்தவர் சத்யராஜ் என்பதால் எந்த ஒரு கதாபாத்திரத்தில் அவர் நடித்தாலும் அதை மக்களால் ஏற்றுக்கொள்ள முடிகிற ஒரு நிலை உள்ளது.

எனவேதான் கட்டப்பா, வால்டர் வெற்றிவேல் மாதிரியான காமெடி தனமே இல்லாத கதாபாத்திரத்திலும் சத்யராஜ் சிறப்பாக நடிப்பார். காமெடியான கதாபாத்திரத்திலும் நடிப்பார். அமைதிப்படை படத்தில் வரும் வில்லன் கதாபாத்திரத்திலும் நடிப்பார்.

தற்சமயம் வரும் திரைப்படங்களில் எல்லாம் ஒரு நகைச்சுவையான கதாபாத்திரம்தான் சத்யராஜுக்கு கிடைத்து வருகிறது. மேலும் இப்போது அவருக்கு வாய்ப்புகள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன. அன்னபூரணி திரைப்படத்தில் கூட மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சத்யராஜ்.

singapore saloon
singapore saloon

இந்த நிலையில் தற்சமயம் சிங்கப்பூர் சலூன் என்னும் ஆர்.ஜே பாலாஜி நடிக்கும் திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்திருக்கிறார். இந்த திரைப்பட அனுபவங்கள் குறித்து ஒரு பேட்டியில் பகிர்ந்து கொள்ளும் பொழுது சில முக்கியமான தகவல்களை பகிர்ந்து இருந்தார் சத்யராஜ்.

அதில் அவர் கூறும் பொழுது இந்த படத்திற்காக விக் (தலைமுடி) செய்யும் பொழுது அதில் நிறைய பிரச்சனைகள் இருந்தன. ஏனெனில் சிங்கப்பூர் சலூன் படத்தில் எனக்கு தலைக்கு நடுவில் குறைவான முடி தான் இருக்கும் அப்படியான முடிவைத்த விக் செய்தால் அது விக் மாட்டி இருப்பதை காட்டி கொடுத்து விடும்.

பிறகு அதற்காக தனியாக கிராபிக்ஸ் ஒர்க் செய்ய வேண்டும் இப்படித்தான் ஒரு படத்திற்கு ஐம்பதாயிரம் ரூபாய்க்கு பிக் செய்து மாட்டி நடித்த பொழுது விக் தெரிந்தது. பிறகு கிராபிக்ஸ் வேலைக்கு 5 லட்சம் செலவு செய்து அந்த விக்கை மறைத்தனர் என்று கூறியிருக்கிறார் சத்யராஜ் இந்த திரைப்படத்திலும் அதே போல கிராபிக் வேலைபாடுகள் மூலமாகவே விக்கை மறைத்திருப்பதாக கூறுகிறார் சத்யராஜ்.

POPULAR POSTS

vengatesh bhat
trisha vijay
ilayaraja
rajini lokesh kanagaraj
sundar c kushboo
deva
To Top