darsha gupta

கவர்ச்சியில் இது ஓவர்லோட்!.. கலக்கும் தர்ஷா குப்தா!.

Actress Tamil Cinema News

Darsha Gupta : விஜய் டிவியின் நாடகங்கள் மூலமாக சின்னத்திரையில் அறிமுகம் ஆனவர் நடிகை தர்ஷா குப்தா. அவர் நாடகங்களில் எவ்வளவு சிறப்பாக நடித்தாலும் கூட அது அவருக்கு பெரிய வெற்றியை பெற்று தரவில்லை.

அதன் பிறகு விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 2 வில் பங்கேற்றதன் மூலமாக தர்ஷா குப்தாவுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைக்க துவங்கியது. அவர் சின்னத்திரையில் மட்டும் நடித்துக் கொண்டிருக்க விரும்பவில்லை.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் எப்படியாவது கால் பதிக்க வேண்டும் என்பது அவருடைய எண்ணமாக இருந்தது. எனவே அதற்காக தனது சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து கவர்ச்சி படங்களை வெளியிட்டு வந்தார்.

இந்த நிலையில் அவருக்கு ருத்ரதாண்டவம் என்கிற திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தன.

ஆனால் அந்த படம் பெரிதாக வரவேற்பை பெறாத காரணத்தினால் தர்ஷா குப்தாவிற்கும் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருந்தாலும் அதற்குப் பிறகு ஓ மை கோஸ்ட் என்கிற திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் தர்ஷா குப்தா.

தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வரும் தர்ஷா குப்தா தற்சமயம் வெளியிட்டிருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது