தமிழ் தயாரிப்பாளர்களுக்கு துரோகம் செய்யாதீங்க!.. விஜய்,அஜித்,தனுஷ் செய்த வேலையால் கவலையில் தயாரிப்பாளர்கள்!.

Vijay Ajith : தமிழ் சினிமாவில் மற்ற சினிமாக்களின் ஊடுருவல் என்பது தற்சமயம் அதிகரித்து இருக்கிறது ஏற்கனவே மலையாள படங்கள் தமிழில் பெரும் வெற்றியை கொடுப்பது குறித்து தமிழ்நாட்டு பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தமிழில் நல்ல படங்களே வரவில்லையா அவற்றை இந்த மாதிரி எந்த ரசிகர்களும் கொண்டாடவில்லையே. பிறகு எதற்கு மலையாள திரைப்படத்தை மட்டும் இப்படி கொண்டாடுகிறார்கள் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர் இந்த நிலையில் தமிழில் பெரும் கதாநாயகர்களின் திரைப்படங்களை தயாரிப்பதில் தயாரிப்பாளர்களுக்கு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது.

vijay
vijay
Social Media Bar

ஏற்கனவே லைக்கா நிறுவனம் விடாமுயற்சி இந்தியன் பாகம் 2 வேட்டையன் போன்ற பெரும் திரைப்படங்களை தயாரித்து வருவதால் அடுத்த பெரும் நடிகர்களை வைத்து திரைப்படம் இயக்குவதில் அவர்களுக்கு பிரச்சனை உண்டாகி இருக்கிறது. இந்த நிலையில் பெரும் நடிகர்கள் திரைப்படத்தை தயாரிப்பதற்கு தெலுங்கு தயாரிப்பாளர்கள் ஈடுபாடு காட்டி வருவதாக கூறப்படுகிறது.

ஏனெனில் தமிழ் சினிமாவில் பெரும் நடிகர்களுக்கு அதிக வரவேற்பு உண்டு அவர்களை வைத்து படம் தயாரிப்பதன் மூலம் அதிக லாபம் ஈட்ட முடியும் என்று தொடர்ந்து தெலுங்கு தயாரிப்பாளர்கள் தமிழ் பிரபலங்கள் மீது டார்கெட் செய்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து விஜய் அஜித் தனுஷ் சிவகார்த்திகேயன், சூர்யா போன்ற நடிகர்களின் திரைப்படங்களை தெலுங்கு தயாரிப்பாளர் நிறுவனங்கள்தான் தயாரிக்க உள்ளன இதை தமிழ் சினிமா கண்டுகொள்ள வேண்டும் என்று இது குறித்து சினிமா பத்திரிக்கையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.