vijay badri

பவண் கல்யாண் படத்துல பிடிச்சி பண்ணுனேன்!.. ஆனால் விஜய் படத்தில் விருப்பமில்லாமல்தான் நடிச்சேன்!.. மாஸ்டர் உசேனி ஓப்பன் டாக்..

Cinema History News Tamil Cinema News

திருமலை திரைப்படத்திற்கு பிறகு தான்  விஜய் ஆக்சன் திரைப்படங்களில் அதிகமாக நடித்த தொடங்கினார் என்று பலரும் கூறுவது உண்டு. ஆனால் அதற்கு முன்பே விஜய் நிறைய ஆக்ஷன் திரைப்படங்களில் நடித்திருக்கிறார் அப்படி அவர் நடித்த திரைப்படங்களில் பத்ரி திரைப்படம் முக்கியமான திரைப்படம் ஆகும்.

ஆனால் அதற்கு முன்பு நடித்த படங்களில் காதலுக்கு அதிக முக்கியத்துவம் இருந்தது. இப்போது விஜய் நடிக்கும் திரைப்படங்களில் அந்த அளவிற்கு காதலுக்கு முக்கியத்துவம் இருப்பதில்லை. இந்த நிலையில்  அப்போதே அவரது ஆக்‌ஷன் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. பத்ரி திரைப்படத்திற்காக மிகவும் மெனக்கட்டு நடித்திருந்தார் விஜய்.

Vijay
Vijay

அதில் வரும் உடற்பயிற்சி காட்சிகளை எல்லாம் பெரும்பாலும் விஜய் டூப் போடாமல் அவரே நடித்திருந்தார். இதனாலேயே அந்த திரைப்படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்தது பத்ரி திரைப்படம் தெலுங்கில்  பவன் கல்யாண் நடித்து வந்த திரைப்படத்தின் ரீமேக் ஆகும்.

விருப்பமில்லாமல் நடித்த உசேனி

இந்த இரு திரைப்படங்களிலும் கதாநாயகனுக்கு சண்டை போட கற்றுத் தரும் மாஸ்டராக சிகான் உசேனி நடித்திருப்பார். உண்மையிலேயே அவர் ஒரு கராத்தே மாஸ்டர் ஆவார். அவர் பேட்டியில் இது குறித்து கூறும் பொழுது எனக்கு திரைப்படங்களில் நடிப்பதெல்லாம் அவ்வளவாக விருப்பம் கிடையாது.

ஒரு சில திரைப்படங்களில் சின்ன காட்சிகளில் அவர்களே வேண்டி விரும்பி கேட்கும் பொழுது நடித்துக் கொடுப்பேன். பத்ரி திரைப்படத்தை பொறுத்தவரை தெலுங்கில் நானாக விருப்பப்பட்டுதான் நடித்தேன். அந்த படத்தின் கதாநாயகன் பவன் கல்யாண் என்னுடைய மாணவன் ஆவான் அதனால் அவனுக்காக நான் அதை செய்து கொடுத்தேன்.

ஆனால் நான்தான் தமிழிலும் பண்ண வேண்டும் என்று விடாப்படியாக நின்றது நடிகர் விஜய் தான். அதனால் எனக்கு விருப்பமில்லை என்றாலும் கூட விஜய் கேட்டுக்கிட்டதற்காக தமிழில் நான் நடித்துக் கொடுத்தேன் என்று கூறியிருக்கிறார் மாஸ்டர் சிகான் உசேனி.