Connect with us

சம்பளத்தை அதிகரிப்பதற்காக சம்பளமே இல்லாமல் நடிக்கும் சூர்யா!.. இவர் கணக்கே புரியலையே!..

Latest News

சம்பளத்தை அதிகரிப்பதற்காக சம்பளமே இல்லாமல் நடிக்கும் சூர்யா!.. இவர் கணக்கே புரியலையே!..

cinepettai.com cinepettai.com

தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் சம்பளம் என்பது நம்ப முடியாத அளவிற்கு அதிகரித்து வருகிறது. புதிதாக அறிமுகம் ஆகும் நடிகர்கள் கூட இரண்டு அல்லது மூன்று படங்களை முடித்த உடனேயே 4 கோடி சம்பளம் கேட்கின்றனர். இதனாலேயே எப்போதும் ஹீரோக்களுக்கு தமிழ் சினிமாவில் டிமாண்ட் இருந்துக்கொண்டே இருக்கிறது.

சூர்யா தன்னுடைய இளம் வயதில் இருந்தே சினிமாவில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர் சினிமாவில் ஏகப்பட்ட ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இப்போதும் சினிமாவில் புது கதைகளங்களை தைரியமாக தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகராக சூர்யா இருந்து வருகிறார்.

இருந்தாலும் கூட உண்மையில் தனுஷ் சிவகார்த்திகேயனுக்கு கிடைக்கும் சம்பளம் கூட சூர்யாவிற்கு கிடைப்பதில்லையாம். நடிகர் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களே 35 கோடிக்கும் அதிகமான சம்பளத்தை வாங்கி வருகின்றனர்.

surya
surya

ஆனால் தற்சமயம் சூர்யா கங்குவா திரைப்படத்திற்கு 28 கோடிதான் சம்பளமாக பெற்றுள்ளாராம். கங்குவா திரைப்படத்தை தயாரிக்கும் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம்தான் சூர்யாவின் 24 படத்தை வெளியிட்டது. அதில் அந்த நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்பட்டது.

எனவேதான் இந்த படத்தை குறைந்த சம்பளத்திற்கு நடித்து தருகிறார். இதற்கு பிறகு அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் சூர்யா நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு அவர் சம்பளம் வாங்கவில்லை என கூறப்படுகிறது.

படத்தின் லாபத்தில் குறிப்பிட்ட பங்கை தனக்கு அளிக்குமாறு கேட்டுள்ளார் சூர்யா. இதன் மூலமாக அதிகமான தொகையை அவர் சம்பளமாக பெற முடியும். எனவே இப்படியொரு திட்டத்தை போட்டுள்ளார் சூர்யா.

POPULAR POSTS

trisha vijay
ilayaraja
rajini lokesh kanagaraj
sundar c kushboo
deva
vijay rajinikanth
To Top