கருப்பு புடவையில் கிறங்க வைக்கும் மாளவிகா மோகனன் புகைப்படங்கள்!..

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்தாலும் கூட அதிகமாக வரவேற்பை பெற்ற நடிகையாக நடிகை மாளவிகா மோகனன் இருக்கிறார்.

Social Media Bar

ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தில் சசிக்குமாருக்கு மனைவி கதாபாத்திரத்தில் அறிமுகமானார் மாளவிகா மோகனன். அதனை தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தன.

பிறகு மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். ஆனால் அந்த திரைப்படத்தில் அவர் ஒன்றும் அவ்வளவு சிறப்பாக நடிக்கவில்லை என அவர் மீது குற்றச்சாட்டு உண்டாது. அவர் நடித்த சில காட்சிகளும் கூட விமர்சனத்துக்கு உள்ளானது.

அதன் பிறகு மாறன் திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்தார். ஆனால் அவர் நடிப்பு அவ்வளவாக திருப்தியாக இல்லை என கூறப்பட்டதால் அவருக்கான வாய்ப்புகள் தமிழ் சினிமாவில் குறைய துவங்கின.

அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் கலக்கல் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் மாளவிகா மோகனன். அப்படி தற்சமயம் கருப்பு புடவை கட்டி அவர் வெளியிட்ட புகைப்படங்கள் ட்ரெண்டிங் ஆகி வருகின்றன.