Connect with us

ஆர்.ஜே பாலாஜிக்கும் த்ரிஷாவுக்கும் செண்டிமெண்ட் ஒர்க் அவுட் ஆகுது போல!.. நல்லப்படியா முடிஞ்சா சரி!..

Latest News

ஆர்.ஜே பாலாஜிக்கும் த்ரிஷாவுக்கும் செண்டிமெண்ட் ஒர்க் அவுட் ஆகுது போல!.. நல்லப்படியா முடிஞ்சா சரி!..

ரேடியோவில் ஆர்.ஜேவாக இருந்து தற்சமயம் தமிழ் சினிமாவில் முக்கியமான பிரபலமாக மாறியிருப்பவர் நடிகர் ஆர்.ஜே பாலாஜி.

இவர் ஆர்.ஜேவாக இருந்தப்போதே இவர் நடத்திய டாக்பேக் என்னும் நிகழ்ச்சி அதிக பிரபலமானது. அந்த நிகழ்ச்சியின் மூலமாக பிரபலங்களுக்கு போன் செய்து அவர்களை கலாய்ப்பதை வேலையாக கொண்டிருந்தார் ஆர்.ஜே பாலாஜி.

சினிமாவில் வளர்ச்சி:

இதனை தொடர்ந்து அவர் அதிகமாக பிரபலமானார். அதற்கு பிறகு வாயை மூடி பேசவும் திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டும்  வந்து சென்றார். பிறகு ஒரு சில திரைப்படங்களில் காமெடியனாக நடித்துவிட்டு அடுத்து கதாநாயகனாக களம் இறங்கினார் ஆர்.ஜே பாலாஜி.

rj-balaji1
rj-balaji1

கதாநாயகனாக அவர் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாம் அவருக்கு பெரும் வெற்றியை கொடுத்தது. முக்கியமாக பெரும்பாலும் பெரும் நடிகைகளுடன் சேர்ந்துதான் நடிப்பார் ஆர்.ஜே பாலாஜி.

புதிய காம்போ:

அப்படி அவர் நடித்த எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன் மாதிரியான திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் அடுத்து ஆர்.ஜே பாலாஜி இயக்கி நடிக்கும் திரைப்படம் ஒன்று தயாராகி வருகிறது. இந்த திரைப்படத்தில் நடிகை த்ரிஷாவும் நடிக்கிறார் என கூறப்படுகிறது.

trisha
trisha

இதற்கு முன்பு த்ரிஷாவை முக்கிய கதாபாத்திரமாக வைத்து வந்த ராங்கி மாதிரியான திரைப்படங்கள் பெரிதாக வரவேற்பை தரவில்லை. ஆனால் ஆர்.ஜே பாலாஜிக்கும் பெரிய நடிகைகளுக்கும் செண்டிமெண்டாக ஒர்க் அவுர் ஆகும் என்பதால் இந்த படம் நன்றாக இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன என கூறப்படுகிறது.

Latest News

tsr dharmaraj
vairamuthu ilayaraja
anirudh ilayaraja
To Top