எந்த படப்பிடிப்புக்கு போனாலும் படுக்கையை பகிர்ந்து கொள்வேன்.. ஓப்பனாக கூறிய நடிகர் சதீஷ்!..

actor sathish

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சதீஷ். நடிகர் சிவகார்த்திகேயனின் நண்பரான சதீஷ் சிவகார்த்திகேயனோடு சேர்ந்தே சினிமாவிற்குள் வந்தார். ஆனால் அதற்கு பிறகு நடிச்சா ஹீரோவாதான் நடிப்பேன் என தெளிவாக இருந்தார் சிவகார்த்திகேயன்.

இதனால் காமெடியனாக இல்லாமல் தொடர்ந்து கதாநாயகனாக நடிக்க துவங்கினார் சிவகார்த்திகேயன். ஆனால் நடிகர் சதீஷிற்கு தொடர்ந்து காமெடியனாக நடிக்கதான் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து விஜய் மாதிரியான பெரும் நடிகர்களுடன் சேர்ந்து திரைப்படங்களில் நடித்தார் சதீஷ்.

சதீஷிற்கு கிடைத்த வரவேற்பு:

கத்தி, பைரவா மாதிரியான படங்களில் தொடர்ந்து நடித்து வந்த சதீஷ் தற்சமயம் கதாநாயகனாக நடிக்க துவங்கியுள்ளார். நாய் சேகர் என்கிற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். அதனை தொடர்ந்து கான் ஜரிங் கண்ணப்பன் என்கிற திரைப்படத்தில் நடித்தார் சதீஷ்.

இந்த நிலையில் சமீபத்தில் பேய் நம்பிக்கை குறித்து பேசியிருந்தார் சதீஷ். அதில் அவர் கூறும்போது ஒரு நாள் இரவுக்கூட இதுவரை நான் தனியாக தூங்கியது கிடையாது. தனியாக தூங்கும்போது பேய் என் அருகில் இருப்பதாக உணர்வேன்.

இப்படி ஒரு வியாதி வேறயா?:

அந்த அளவிற்கு எனக்கு பேய் மீது பயம் உண்டு. எனவே படப்பிடிப்புகளுக்கு சென்றாலும் கூட அங்கு உதவி இயக்குனர் மாதிரி படத்தில் பணிப்புரியும் யாரையாவது கூட படுக்க வைத்து கொள்வேன்.

இந்த நிலையில் ஒரு நாள் என்னுடன் தூங்கும் நபர் இரவு படப்பிடிப்புக்கு சென்றுவிட்டார். இதனை அடுத்து தனியாக படுத்திருந்தேன். அப்போது எனக்கு அருகில் பேய் அமர்ந்திருப்பதாக தோன்றியது.

உடனே எழுந்து சென்று ஹோட்டல் வரவேற்பறையில் இருந்த ஷோபாவில் படுத்து தூங்கினேன். ஏனெனில் அங்கு பணிப்புரிபவர்கள் இரண்டு பேர் இருந்தார்கள் என கூறியுள்ளார் சதீஷ்.