Connect with us

ரஜினிகாந்துக்கு அடுத்தவன் பொண்டாட்டிதான் செட் ஆகும்!.. பிரபல நடிகர் ஓப்பன் டாக்.!

rajinikanth

Latest News

ரஜினிகாந்துக்கு அடுத்தவன் பொண்டாட்டிதான் செட் ஆகும்!.. பிரபல நடிகர் ஓப்பன் டாக்.!

தமிழ் சினிமாவில் அதிக வசூல் கொடுக்கும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். பெரும்பாலும் ரஜினிகாந்த் திரைப்படங்களுக்கு வரவேற்பு கிடைப்பதற்கு காரணம் அவரது இத்தனை வருட உழைப்புதான் என்று கூற வேண்டும்.

அந்த அளவிற்கு பல திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் மக்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்துக் கொண்டார் ரஜினிகாந்த்.

கதாநாயகிகளுடன் ஜோடி:

வயதான பிறகும் கூட இளமையான நடிகைகளுடன் சேர்ந்து நடித்து வந்தார் ஆரம்பத்தில் அது கொஞ்சம் பேசப்பட்ட விஷயமாக இருந்தாலும் அவ்வளவாக ரஜினிகாந்த் இந்த நடிகைகளுடன் நெருங்கி நடிப்பதில்லை என்பதால் அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வது கிடையாது.

தற்சமயம் ரஜினிகாந்த் வேட்டையன் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து அடுத்து கூலி திரைப்படத்தில் நடிக்க உள்ளார். கூலியை தொடர்ந்து ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

rajinikanth
rajinikanth

இந்த நிலையில் அண்மையில் மன்சூர் அலிகான் ஒரு பேட்டியில் பேசும்பொழுது ரஜினிகாந்த் குறித்து பேசியிருந்தார். அதில் அவர் கூறும் பொழுது ரஜினிகாந்த்திற்கு 70, 80 வயது ஆகிவிட்டது. அதனால் அவருக்கு ஒவ்வொரு திரைப்படத்திற்கும் கதாநாயகியை தேடுவது பெரும் கஷ்டமாக இருக்கிறது.

மன்சூர் அலிக்கான் விமர்சனம்:

அவருக்கு தேடும் கதாநாயகிகள் அடுத்தவன் பொண்டாட்டியாய் இருக்கணும் என்கிற நிலை இருக்கிறது. அதாவது 20, 25 வயதில்  இருக்கும் பெண்களை இவருக்கு கதாநாயகியாக நடிக்க வைக்க முடியாது. அதிகபட்சம் திருமணமான நடிகைகள்தான் ரஜினிகாந்த்துக்கு ஜோடியாக செட்டாகிறார்கள் என்பதை தான் அப்படி கூறினேன்.

அதை யாரும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். உதாரணமாக பிரபல நடிகை ஐஸ்வர்யா ராயை கூறலாம் என்றார் மன்சூர் அலிகான். மேலும் அவர் கூறும் பொழுது ரஜினிக்கு இப்போது அதிக வயதாகிவிட்டது. இருப்பினும் கோடிக்கணக்கில் செலவு செய்யும் தயாரிப்பாளர்கள்தான் இவரை தேடி செல்கின்றனர்.

இதனால் சின்ன பட்ஜெட் படங்களின் நிலைமை படு மோசமாக இருக்கிறது எனவே சின்ன பட்ஜெட் திரைப்படங்கள் வெளியானால் அவற்றை உதாசீனப்படுத்தி பார்க்காமல் இருக்காதீர்கள் எப்படியும் அந்த படமும் உங்களை ஒரு விதத்தில் ரசிக்க வைக்கும் என்று கூறுகிறார் மன்சூர் அலிகான்.

To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE

தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்

Latest News

samantha nagarjuna
livingston daughter
actress manthra
malavika
madampatty rangaraj
samantha
To Top