எம்.ஜி.ஆருக்கு எப்படி ஜெயலலிதாவோ அதே போல விஜய்க்கு… கட்சியில் இணையும் நடிகை!..

கடந்த சில வாரங்களாகவே நடிகர் விஜய் குறித்து சில தகவல்கள் சமீபத்தில் வலம் வந்து கொண்டிருந்தன. முக்கியமாக திரிஷாவிற்கும் விஜய்க்கும் இருக்கும் உறவு குறித்துதான் பேச்சுக்கள் அதிகமாக இருந்து வந்தன.

விஜய் ஒரு நடிகையுடன் அதிக திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்றால் அந்த வரிசையில் திரிஷாவிற்கு முக்கியமான இடமிருக்கும். அந்த அளவிற்கு நிறைய திரைப்படங்களில் திரிஷாவுடன் இணைந்து நடித்திருக்கிறார். விஜய் மற்றும் திரிஷாவிற்கு இடையே நல்ல கெமிஸ்ட்ரி இருந்து வருகிறது.

விஜய் அரசியல்:

இது அல்லாமல் அவர்களுக்கு அப்போதிலிருந்து அவர்களுக்கு இடையே காதல் இருந்ததாகவும் பேச்சுக்கள் இருக்கின்றன. இதற்கு நடுவே சமீபத்தில் விஜய்யின் ஐம்பதாவது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார் திரிஷா.

thalapathy-vijay1
thalapathy-vijay1
Social Media Bar

அந்த புகைப்படத்தில் ஒரு லிஃப்டில் விஜய்யும் திரிஷாவும் இருப்பது தெரிந்தது. அதனைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் பலவாறு பேச துவங்கினர். முக்கியமாக த்ரிஷாவும் விஜய்யும் எப்போதும் உறவில் தான் இருக்கின்றனர் என்றெல்லாம் பேசி வந்தனர்.

கட்சியில் சேரும் நடிகை:

இந்த நிலையில் தற்சமயம் விஜய்யின் அரசியல்களும் திரிஷாவிற்கு ஆர்வம் இருப்பதாக பேச்சுக்கள் இருந்து வருகிறது. கட்சி துவங்கிய பிறகு அரசியலில் பிரபலமாக இருக்கும் சில நடிகர்களை சேர்த்துக் கொள்ளலாம் என்று திட்டமிட்டு இருக்கிறாராம் விஜய்.

trisha

இந்த நிலையில் அவரது அரசியல் கட்சியில் சேர்வதற்கு நடிகை திரிஷாவும் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. எம்.ஜி.ஆருக்கு எப்படி கட்சி ஆரம்பித்த பொழுது ஜெயலலிதா ஒரு துணையாக வந்து சேர்ந்தாரோ அதேபோல தளபதிக்கு திரிஷா ஜோடியாக சேருகிறார் போலிருக்கிறது என்று பேச துவங்கியிருக்கின்றனர்.

ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வரவில்லை ஆனால் விரைவிலேயே வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது