விஜய் கட்சி கொடி அப்படியிருக்க காரணம் என்ன? யானை பூ ரெண்டுக்குமே காரணம் உண்டு..

vijay flag

அரசியல்வாதியாக களம் இறங்கப் போகும் நடிகர் விஜய் தற்போது தன்னுடைய தமிழக வெற்றி கழகத்தின் கட்சியின் கொடியை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். இந்நிலையில் பனையூரில் உள்ள தன்னுடைய அலுவலகத்தில் கட்சி கொடியை அறிமுகம் செய்து வைத்த விஜய், தன்னுடைய பெற்றோரின் ஆசிர்வாதத்துடனும் 300 நிர்வாகிகள் கலந்து கொண்ட கட்சிக் கொடியை வெளியிடும் நிகழ்ச்சியில், அக்கட்சியின் பாடலையும் சேர்த்து வெளியிட்டு இருக்கிறார்.

கட்சிக்கொடி எவ்வாறு அமைந்திருக்கிறது என்ற ஆர்வம் அனைவரின் மத்தியிலும் எழுந்திருந்தது. இந்நிலையில் விஜய் தன்னுடைய கட்சியின் கொடியை வெளியிட்டு இருக்கிறார். அதில் சில குறிப்பிட்ட முக்கிய அம்சங்கள் இடம்பெற்று இருப்பதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

நடிகர் விஜயின் கட்சிக்கொடி

தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியை அறிமுகம் செய்து வைத்த விஜய்க்கு பல அரசியல் தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடி சிவப்பு மற்றும் மஞ்சள் வண்ணங்களில், இரண்டு போர் யானைகள் இடம் பெற்று இருக்கிறது. யானைகளுக்கு நடுவில் வாகை மலர் இடம்பெற்று இருக்கிறது.

யானை: யானை காலம் காலமாக நம்முடைய நாட்டின் பாரம்பரிய விலங்காக பார்க்கப்படுகிறது. ஆன்மீக ரீதியாகவும் பலமான விலங்காக இருக்கும் யானை மன்னர்கள் காலத்தில் இருந்து போரில் பயன்படுத்தப்பட்ட முக்கிய விலங்கு. மற்ற நாட்டு அரசர்கள் நம் நாட்டின் மீது படையெடுத்து வரும் பொழுது, போரில் பயன்படுத்தப்படும் முக்கிய படைகளில் யானைப்படை முக்கிய பங்கு வகிக்கும்.

vijay

எனவே யானை வலிமையின் சின்னமாகவும், மக்களுக்களின் தன் கொள்கைக்காகவும் உறுதியாக நிற்கும் என நம்பப்படுகிறது. மேலும் மற்ற விலங்குகளுக்கு இல்லாத ஒரு சிறப்பு யானைக்கு உள்ளது. ஞானம் எனவே கட்சி மக்களுக்காக சரியான முடிவுகளை எடுக்கும் என்பதை இது குறிக்கிறது.

வாகை மலர்: பொதுவாக பூக்கள் அழகு, அமைதியின் அம்சமாக பார்க்கப்படுகிறது. எனவே மக்களுக்கு ஒரு அழகான எதிர்காலத்தையும், அமைதியான சமுதாயத்தையும் உருவாக்குவதை இது குறிக்கிறது. நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வதையும் இந்த மலர் குறிக்கிறது.

அதிலும் சிறப்பாக வாகை மலர் இடம்பெற்று இருப்பது என்பது, கட்சியில் தமிழக வெற்றிக் கழகம் என இருப்பதால் வாகை என்பதன் பொருள் வெற்றி என பொருள்படுவதாகும். மன்னர்கள் போரில் வெற்றி பெற்றால் பழந்தமிழர்கள் வாகை மலர் அணிந்து கொண்டாடுவார்கள். எனவே வாகை மலர் இதில் இடம்பெற்று இருப்பது மேலும் ஒரு சிறப்பாக அமைந்துள்ளது.

யானை மற்றும் வாகை மலர்

எனவே நாட்டை வலிமையான, அமைதியான, அழகான, நியாயமான ஒரு பாதையில் இவரின் கட்சி கொண்டு செல்லும் என்பதை உணர்த்து விதமாக கட்சிக் கொடியில் இந்த இரண்டு சின்னங்களும் குறிக்கலாம். பாரம்பரியத்தையும் பறைசாற்றும் விதமாக இக்கட்சியின் சின்னங்கள் குறிக்கலாம் என கூறப்படுகிறது.

Share Share on Facebook Share on X Share on LinkedIn Share on Pinterest Share on WhatsApp

Raj

Rajkumar is a professional content writer with over four years of experience specializing in the vibrant world of Tamil cinema. He is passionate about creating high-quality, engaging, and reader-friendly content that resonates with fellow cinephiles. Throughout his career, he has successfully delivered insightful movie reviews, in-depth film analyses, and timely updates on the Kollywood industry. His expertise ensures that readers receive well-researched and entertaining perspectives, making his work a go-to resource for anyone passionate about Tamil films.