நல்ல படம் வந்தா சொல்லுறேன்.. கிளம்புங்க.. அஜித்தை நேரடியாக கலாய்த்த ஹெச். வினோத்.. நடிகையால் வெளிவந்த தகவல்..!

தமிழில் முக்கியமான இயக்குனர்கள் என்று பட்டியலிட்டால் அதில் மிக முக்கியமான இடத்தில் இருக்க கூடியவர் இயக்குனர் ஹெச்.வினோத் ஹெச்.வினோத் ஒரு ஆகச் சிறந்த படைப்பாளி என்று கூறலாம்

ஒவ்வொரு திரைப்படத்தையும் இயக்கும் பொழுது அந்த திரைப்படத்தின் கதைகளுக்கான ஹெச்.வினோத் மெனக்கெடல்கள் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.

அவரது முதல் திரைப்படமான சதுரங்க வேட்டை திரைப்படத்திலேயே எம் எல் எம் எனப்படும் மிகப்பெரிய ஏமாற்று வேலை குறித்து மிகப் பெரிதாக பேசியிருந்தார். ஹெச்.வினோத் ஈமு கோழி மோசடியிலிருந்து துவங்கி பல பண மோசடிகளை அதில் விவரித்து இருந்தார்கள்.

h vinoth
h vinoth
Social Media Bar

மஞ்சு வாரியர் சொன்ன விஷயம்:

இப்படி ஒவ்வொரு திரைப்படத்திலும் புதிதான ஒரு விஷயத்தை தேர்ந்தெடுத்து படமாக்க கூடியவர் ஹெச்.வினோத். அதற்கு பிறகு அவர் இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்திலுமே கூட அப்படியான விஷயத்தை பார்க்க முடிந்தது.

ஆனால் பெரிய ஹீரோக்களை வைத்து படம் இயக்கத் துவங்கிய பிறகு ஹெச்.வினோத் அவரது இஷ்டத்திற்கு படம் இயக்கம் முடியவில்லை கதாநாயகர்களுக்கு ஏற்ற மாதிரி கதையை மாற்றுவதால் அவருக்கு தொடர்ந்து வெற்றி படங்களே அமையவில்லை.

manju
manju

அதற்கு பிறகு அவர் இயக்கிய வலிமை, துணிவு இரண்டு திரைப்படங்களுமே ஹெச் வினோத்தின் திரைப்படம் போல இல்லை. வேறு ஏதோ ஒரு திரைப்படம் போல தான் இருந்தது .இந்த நிலையில் அடுத்து அவர் தளபதி 69 திரைப்படத்தை இயக்க இருக்கிறார்.

இந்த நிலையில் துணிவு திரைப்படத்தில் மஞ்சு வாரியர் நடித்த பொழுது அவருக்கு சின்ன கதாபாத்திரம்தான் அந்த படத்தில் இருந்தது இந்த படத்திற்கு இவ்வளவுதான் கதாபாத்திரம் வேறு நல்ல படம் எடுக்கும் பொழுது உங்களுக்கு சொல்கிறேன் என்று கூறியிருக்கிறார் ஹெச்.வினோத். இந்த விஷயத்தை மஞ்சு வாரியர் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.