மாநாட்டுக்கு பிறகு அதுக்காக வெயிட்டிங்… லியோ 2 குறித்து அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்..!

நடிகர் விஜய் கட்சி துவங்கியது முதலே அவரது ரசிகர்களுக்கு இருக்கும் கவலை என்னவென்றால் அவர் இனி திரைப்படங்களில் நடிக்க மாட்டார் என்கிற விஷயம்தான்.

ஏனெனில் விஜய் கட்சி தொடங்கினாலும் கூட அவர் படங்களிலும் நடித்துக் கொண்டிருப்பார் என்பது ரசிகர்களின் எண்ணமாக இருந்தது. ஆனால் திடீரென்று விஜய் 2026 தேர்தலுக்குப் பிறகு திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை என்று கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் தற்சமயம் இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம்தான் அவருடைய இறுதி திரைப்படம் என்று கூறப்படுகிறது.

அதற்குப் பிறகு அவர் சுத்தமாக சினிமாவை விட்டு விலக இருக்கிறார் அதிகபட்சம் நடித்தாலும் கூட ஏதாவது ஒரு படத்தில் சின்ன காட்சிகளில் வேண்டுமானால் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது இந்த நிலையில் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் பிளடி பக்கர் திரைப்படம் குறித்து தனது கருத்தை தெரிவித்து இருந்தார்.

leo
leo
Social Media Bar

லியோ 2 அப்டேட்:

ய்அந்த பேட்டியில் அவரிடம் விஜயின் மாநாடு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. ஆனால் அதற்கு பெரிதாக லோகேஷ் கனகராஜ் பதிலளிக்கவில்லை.

இந்த நிலையில் அவரிடம் லியோ 2 படம் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்டனர் அதற்கு பதில் அளித்த லோகேஷ் கனகராஜ் விஜய் அண்ணா மனசு வைத்தால் அந்த படம் வரும் என்று கூறினார்.

இதை வைத்து பார்க்கும் பொழுது லியோ 2 படத்திற்கான கதை லோகேஷ் கனகராஜிடம் இருக்கிறது. விஜய் ஒருவேளை இன்னும் ஒரு படம் நடிப்பதாக இருந்தால் லியோ-2 திரைப்படத்தை எடுக்க லோகேஷ் கனகராஜ் தயாராக இருக்கிறார் என்று தெரிகிறது.