Connect with us

அடுத்த ஒன்றரை வருஷத்துக்கு படம் கிடையாது – திடீர் தகவல் வெளியிட்ட அஜித்

Latest News

அடுத்த ஒன்றரை வருஷத்துக்கு படம் கிடையாது – திடீர் தகவல் வெளியிட்ட அஜித்

cinepettai.com cinepettai.com

தல என ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் அஜித் தற்சமயம் நடித்து வெளியாகவிருக்கும் திரைப்படம் துணிவு. துணிவு திரைப்படமும் விஜய்யின் வாரிசு திரைப்படமும் வரும் பொங்கல் அன்று போட்டி போட்டுக்கொண்டு வெளியாக இருக்கிறது. 

ஆனால் நடிகர் விஜய் எப்போதும் வருடத்திற்கு இரண்டு படங்கள் அல்லது ஒரு படமாவது கொடுத்து விடுவார். அஜித்துக்கு அப்படி கொடுக்க முடிவதில்லை. இந்நிலையில் துணிவு திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவனோடு இணைந்து தனது 62 வது படத்தில் நடிக்க இருக்கிறார் அஜித். 

இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது. ஆனால் இந்த படத்திற்கு பிறகு உலக நாடுகளை சுற்ற பயணம் மேற்கொள்ளலாம் என அஜித் திட்டமிட்டுள்ளாராம். இதுவரை 62 படங்கள் நடித்ததை முன்னிட்டு 62 நாடுகளை சுற்றலாம் என திட்டமிட்டுள்ளார்.

எனவே 62 வது திரைப்படத்திற்கு பிறகு அடுத்த 18 மாதங்களுக்கு அஜித் படம் நடிப்பதாக இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

POPULAR POSTS

vijay
ajith
sundar c
bharath
samantha prabhas
vijayakanth SA chandrasekar
To Top