அஜித்தின் துணிவு தேதி மாற்றமா? – அதிருப்தியில் ரசிகர்கள்!

பல வருடங்களுக்கு பிறகு அஜித் படமும் விஜய் படமும் வரும் பொங்கலுக்கு போட்டி போட இருப்பதாக செய்திகள் வந்தன. இதனால் நடிகர் விஜய் மற்றும் அஜித்தின் ரசிகர்கள் போட்டி மன நிலையில் இருந்தனர்.

Social Media Bar

ஆனால் இரண்டு திரைப்படங்களுமே அதிக பட்ஜெட் திரைப்படங்கள் என்பதால் ஒரே நாளில் வெளியாகும்போது அது இரண்டு படத்தின் வசூலையும் பாதிக்கும் என திரை துறையில் வாதங்கள் இருந்தன.

இந்த நிலையில் துணிவு படம் பொங்கலுக்கு வெளியாகாது என்பது போல தகவல்கள் வந்துள்ளன. குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 26 ஆம் தேதிதான் துணிவு வெளியாகும் என பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

துணிவு படத்திற்கான வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் பிக்சர்ஸ் வாங்கியுள்ளது. அதே போல வாரிசு படத்தை செவன் ஸ்கீரின் ஸ்டுடியோ வாங்கியுள்ளது.

தல, தளபதி திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாவது இது ஒன்றும் புதிது இல்லை என்பதால் பொங்கலுக்கு இரு படங்களும் வெளியாவதற்கும் வாய்ப்பு உண்டு என கூறப்படுகிறது.