ஜெயிலர்க்கு டஃப் கொடுக்கும் பான் இந்தியா படம்-  நெல்சனுக்கு மறுபடியும் அடியோ?

பிரின்ஸ், சர்தார் போன்ற திரைப்படங்கள் வெளியான பிறகும் கூட இன்னும் பொன்னியின் செல்வன் பல திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டுள்ளது.

பொன்னியின் செல்வன் திரைப்படம் பெரிய கதை என்பதால் அதை சுருக்கி இரு பாகங்களாக எடுத்துள்ளனர். ஆனாலும் கூட படக்கதை மிகவும் வேகமாக செல்வதாக ரசிகர்கள் குறை கூறியிருந்தனர். படத்தை மூன்று பாகங்களாக எடுத்திருக்கலாம் என்றும் ஒரு சாரார் பேசி வருகின்றனர்.

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகமானது வருகிற ஏப்ரல் 2023 அன்று வெளியாகவுள்ளது. கிட்டத்தட்ட ஜெயிலர் திரைப்படமும் கூட ஏப்ரல் மாதத்திலேயே வெளியாகலாம் என தகவல்கள் வெளி வந்துள்ளன.

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வருகிறது ஜெயிலர் திரைப்படம். பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தை போலவே ஜெயிலர் திரைப்படத்திற்கும் மக்களிடையே வரவேற்பு இருந்து வருகிறது.

ஏற்கனவே கே.ஜி.எஃப் 2 வெளியான அதே சமயத்தில் பீஸ்ட் வெளியானதால் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. இதனால் நெல்சன் அதிகமான விமர்சனத்துக்கு உள்ளானார். இந்நிலையில் மறுபடியும் பான் இந்தியா படத்துடன் போட்டி போடுவது நெல்சனுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது.

Refresh