பாக்கியராஜ் சமூகத்திற்கு கருத்து சொல்லும் விதமாக நிறைய திரைப்படங்களை முந்தைய காலகட்டங்களில் இயக்கி இருக்கிறார்.
அப்படி அவர் இயக்கிய படங்கள் பலவும் நல்ல வெற்றியும் கொடுத்திருக்கின்றன. அப்படியாக அவரே இயக்கிய திரைப்படங்களில் இது நம்ம ஆளு என்கிற திரைப்படம் மிக முக்கியமான திரைப்படம் ஆகும்.
பிராமணிய எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக இந்த படத்தின் கதை இருக்கும். ஒரு பிராமண பெண்ணை காதலிக்கும் கதாநாயகன் முடி வெட்டும் நாவிதனின் மகனாக இருப்பார். இந்த நிலையில் இவர்களுக்குள் நடக்கும் திருமணமும் அதை வைத்து நடக்கும் சமூகப் பிரச்சனைகளையும் அடிப்படையாக இந்த படம் கொண்டிருக்கும்.

இதில் இருந்த ஒரு காட்சி குறித்து பாக்கியராஜ் சமீபத்தில் பேட்டியில் பேசியிருந்தார். அதில் அவர் கூறும் பொழுது படத்தில் ஒரு காட்சியில் ஒரு ரவுடி அய்யர் ஒருவரை தொல்லை கொடுத்துக் கொண்டிருப்பான். அப்பொழுது நான் அவரை அடிக்க செல்வேன்.
அவ்வாறு அடிக்க செல்வது பிராமண பழக்கம் கிடையாது என்று கிருஷ்ணன் ஐயர் என்பவர் என்னை தடுப்பார். அப்பொழுது நான் மீண்டும் செல்வதற்கு தயாராகும் பொழுது உன்னுடைய வேலையே போய்விடும் என்று என்னிடம் கூறுவார்.
உடனே நான் அவரிடம் வேலை போனா மயிரா போச்சு என்று கூறிவிட்டு செல்வேன். இந்த வசனம் சென்சாருக்கு சென்ற பொழுது அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
எனவே அந்த வசனத்தை நீக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் இப்பொழுது எல்லாம் சினிமாவில் அப்படியா இருக்கிறது எவ்வளவோ மோசமான வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர் என்று கூறியிருக்கிறார் பாக்யராஜ்.








