தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரங்களிலும் சீரியல்களிலும் நடித்து வருபவர் இயக்குனர் பாரதி கண்ணன். பாரதி கண்ணன் தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான இயக்குனர் ஆவார்.
அவர் ஒரு சில திரைப்படங்களைதான் இயக்கியிருக்கிறார் என்றாலும் கூட முதல் படத்திலேயே பெரிய வெற்றியை கொடுத்தவர் பாரதி கண்ணன். அப்படியாக அவர் முதன்முதலில் எடுத்த திரைப்படம் தான் கண்ணாத்தாள்.
கண்ணாத்தாள் என்பது சாமி படம் என்றாலும் கூட அதில் உள்ள காமெடி காட்சிகள் இப்பொழுது வரை மக்கள் மத்தியில் மிகப் பிரபலமானவை. சூனா பானா என்கிற வடிவேலுவின் காமெடி காட்சிகள் மூலம் தான் இப்பொழுது வரை அந்த படம் பிரபலமாக இருக்கிறது.
வில்லுப்பாட்டு பாடும் ஒரு பெண் கண்ணாத்தாள் என்கிற வட்டார தெய்வத்தின் கதையை விளக்குவதாக இந்த படத்தின் கதை துவங்கும். இந்த படத்திற்காக இசையமைப்பதற்கு இளையராஜாவிடம் சென்ற அனுபவத்தை பாரதி கண்ணன் ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.
அவர் கூறும் பொழுது இளையராஜாவை நான் சந்திக்க சென்ற சமயத்தில் அவர் நல்ல வேலையாக எந்த வேலையும் இல்லாமல் இருந்தார். அப்பொழுது நான் அவரிடம் சென்று படத்தின் கதையை பேச தொடங்கினேன். ஒரு வில்லுப்பாட்டு பெண் எப்படி இந்த கதையை கூறுகிறார் என்று கூறி மொத்த கதையும் கூறினேன்.
ஆனால் படத்தில் வரும் காமெடி காட்சிகளை நான் கூறவே இல்லை. ஏனெனில் இளையராஜாவிற்கு காமெடி காட்சிகள் பிடிக்காது. எனவே அந்த வடிவேலு காட்சிகள் அனைத்தையும் நீக்கிவிட்டு இந்த கதையை ஒரு மணி நேரம் கூறினேன்.
அதை கேட்ட பிறகு அந்த காலத்தில் பழையனூர் நீலி என்கிற ஒரு திரைப்படம் வந்தது. அந்த படம் நல்ல வெற்றியை கொடுத்தது. அந்த திரைப்படத்தின் கதை போலவே உன்னுடைய கதையும் இருக்கிறது இதை நீ நல்லபடியாக எடுத்து விட்டால் இந்த படமும் நல்ல வெற்றியை கொடுக்கும் என்று கூறினார் என்று அந்த நிகழ்வை பகிர்ந்து இருக்கிறார் பாரதி கண்ணன்.









