ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு நடிகராக இருந்தவர் நடிகர் கார்த்திக். பெரும்பாலும் கார்த்திக் நடிக்கும் திரைப்படங்கள் பெரும் வெற்றியை கொடுத்த காரணத்தினால் அவருக்கு வாய்ப்புகள் என்பதும் அதிகமாக இருந்து வந்தன.
ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகு கார்த்திக்கு வாய்ப்புகள் என்பது குறைய தொடங்கியது. அதற்கு முக்கிய காரணம் அவருடைய குணம் தான் என்று கூறப்படுகிறது.
அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு படம் நடிக்காமல் இருப்பது என்று அவர் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் இருந்தன. இது குறித்து இயக்குனர் பாரதி கண்ணன் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது என்னுடைய தயாரிப்பாளர் ஒருமுறை கார்த்தியை வைத்து படம் பண்ணலாம் என்று என்னிடம் கூறினார்.
நானும் ஒரு ஐந்து லட்ச ரூபாயை அட்வான்ஸ் ஆக எடுத்துக் கொண்டு கார்த்தியிடம் கதையை கூற சென்றேன். முதலில் அட்வான்ஸ் வாங்கிக் கொண்ட கார்த்தி கதையை ஊட்டிக்கு வந்து கூறுங்கள் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.
பிறகு நான் ஊட்டிக்கு சென்ற பொழுது கதையை முழுமையாக கேட்டார் ஆனால் ஊட்டிக்கு வரும்பொழுது இன்னும் ஒரு ஐந்து லட்சம் எடுத்து வரச் சொன்னார் சரி என்று எடுத்துக் கொண்டு போய் கொடுத்துவிட்டோம்.
கதையை கேட்ட பிறகு கார்த்தி அந்தக் கதை பிடிக்கவில்லை மிகவும் அதிக ரத்த காட்சிகளுடன் இந்த கதை இருக்கிறது. எனவே கதையை மாற்றலாமே என்று கூறினார். இந்த சமயத்தில் எங்களுடைய தயாரிப்பாளர் கார்த்தியை குறித்து விசாரித்தார்.
அப்பொழுதுதான் கார்த்திக்கு பணம் கொடுத்துவிட்டு வாய்ப்பு வாங்குவது அவ்வளவு எளிதல்ல என்று தெரிந்து கொண்டோம் என்று கூறியிருக்கிறார் பாரதி கண்ணன்.









