சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

90ஸ் கிட்ஸ் மத்தியில் மிக பிரபலமாக இருந்த ஒரு சூப்பர் ஹீரோ தொடர்தான் சக்திமான். சொல்லப்போனால் இந்தியாவின் முதல் சூப்பர் ஹீரோ என்று சக்திமானை சொல்வார்கள். அந்த காலக்கட்டத்தில் இந்தியாவில் சூப்பர் ஹீரோ தொடர் என்று எதுவுமே பெரிதாக வராமல் இருந்த காலக்கட்டமாகும்.

தொலைக்காட்சிகளே அப்போது பணக்காரர்கள் வீட்டில் மட்டுமே இருந்து வந்தது. இந்த நிலையில்தான் புது சூப்பர் ஹீரோ தொடராக வந்து மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது சக்திமான் தொடர். வெகு காலங்கள் ஓடிய சக்திமான் தொடரை இயக்கி, தயாரித்து அதில் சக்திமானாக நடித்தவர் நடிகர் முகேஷ் கண்ணா.

அதனாலேயே 90ஸ் கிட்ஸ்களின் பால்ய நினைவுகளில் சக்திமான் ஒரு நினைவாக இருக்கும். இந்த நிலையில்தான் சோனி நிறுவனம் சக்திமான் கதாபாத்திரத்தை கொண்டு ஒரு ஹாலிவுட் திரைப்படத்தை துவங்கலாம் என முடிவெடுத்தது.

இந்த திரைப்படத்தை இயக்குனரும் நடிகருமான பாசில் ஜோசப் இயக்க இருப்பதாக பேசப்பட்டது. ஏனெனில் ஏற்கனவே மலையாளத்தில் பாசில் ஜோசப் குறைந்த பட்ஜெட்டில் மின்னல் முரளி என்கிற திரைப்படத்தை இயக்கியிருந்தார். அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்துதான் சக்திமான் திரைப்படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு என்பது பாசில் ஜோசப்புக்கு வந்தது.

இந்த படத்தில் நடிகர் ரன்வீர் சிங்தான் சக்திமானாக நடிக்க இருந்தது. ஆனால் பாசில் ஜோசப் தொடர்ந்து பிஸியாக இருந்து வருவதால் தற்சமயம் இந்த படம் இன்னும் துவங்கவே இல்லை. கூடிய விரைவில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Share Share on Facebook Share on X Share on LinkedIn Share on Pinterest Share on WhatsApp

Raj

Rajkumar is a professional content writer with over four years of experience specializing in the vibrant world of Tamil cinema. He is passionate about creating high-quality, engaging, and reader-friendly content that resonates with fellow cinephiles. Throughout his career, he has successfully delivered insightful movie reviews, in-depth film analyses, and timely updates on the Kollywood industry. His expertise ensures that readers receive well-researched and entertaining perspectives, making his work a go-to resource for anyone passionate about Tamil films.