Connect with us

இந்திய ராக்கெட் விஞ்ஞானிகள் குறித்து தமிழில் ஒரு சீரிஸ்-  அப்துல்கலாமும் இருக்கார்..!

Cinema History

இந்திய ராக்கெட் விஞ்ஞானிகள் குறித்து தமிழில் ஒரு சீரிஸ்-  அப்துல்கலாமும் இருக்கார்..!

cinepettai.com cinepettai.com

இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தபோது பொருளாதார ரீதியாகவும் ,சட்ட ரீதியாகவும் இந்தியாவிற்கு பெரும் பிரச்சனைகள் இருந்தன. அப்போது இருந்த விஞ்ஞானிகள், தலைவர்கள் அனைவருமே இந்தியாவை தூக்கி நிறுத்துவதற்கு மிகவும் பாடுப்பட்டுள்ளனர்.

அதனால்தான் அவர்களை நாம் தேச தலைவர்கள் என அழைக்கிறோம். பெரும்பாலும் தேச தலைவர்கள் குறித்து திரைப்படங்கள் வந்தாலும் அது அவ்வளவு சுவாரஸ்யமாக இருப்பதில்லை.

ஆனால் தற்சமயம் சோனி லிவ்வில் வெளியான ராக்கெட் பாய்ஸ் சீரிஸ் விறுவிறுப்பான சீரிஸாக அமைந்துள்ளது. இந்தியாவிற்கு விடுதலை கிடைத்த சமயத்தில் விண்வெளி ஆராய்ச்சியில் முக்கிய பங்காற்றியவர்கள் ஹோமி பாபா மற்றும் விக்ரம் சாராபாய்.

இவர்கள் இருவருக்கு பிறகு மூன்றாவதாக அப்துல்கலாம் விண்வெளி ஆராய்ச்சியில் முக்கிய பங்காற்றியுள்ளார். இந்தியாவில் வாண்வெளி ஆராய்ச்சிக்கு இவர்கள் செய்த முயற்சியை கூறும் சீரிஸாக ராக்கெட் பாய்ஸ் உள்ளது.

இரண்டு சீசன்களாக வந்துள்ளது ராக்கெட் பாய்ஸ் சீரிஸ். இதில் முதல் சீசனில் இந்தியாவின் முதல் ராக்கெட் ஏவுவது வரை சீசன் தொடர்கிறது. அதற்கு பிறகு இரண்டாவது சீசனில் இந்தியாவின் முதல் அணுக்குண்டு தயாரிப்பு வரை கதை செல்கிறது.

இந்தியாவின் முதல் அணுக்குண்டு கண்டுப்பிடிப்பு பயணமானது மிகவும் சுவாரஸ்யமான பயணமாகும். ஏனெனில் இந்தியா அணுக்குண்டு தயாரிக்க கூடாது என பல சதி வேலைகளை அப்போது அமெரிக்கா செய்து வந்தது. அதையெல்லாம் தாண்டி ஹோமி பாபா எடுக்கும் முயற்சிகள் பார்ப்பதற்கு ஒரு ஆக்‌ஷன் திரைப்படம் போலவே உள்ளது.

எனவே இந்திய மக்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கிய கதையாக ராக்கெட் பாய்ஸ் சீரிஸ் உள்ளது.

To Top