Connect with us

ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுக்கு கூட அவ்வளவு மரியாதை கொடுப்பார்!.. லோகேஷ் கனகராஜின் தெரியாத பக்கங்கள்..

lokesh kanagaraj

Latest News

ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுக்கு கூட அவ்வளவு மரியாதை கொடுப்பார்!.. லோகேஷ் கனகராஜின் தெரியாத பக்கங்கள்..

cinepettai.com cinepettai.com

தமிழில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். வெறும் ஐந்து திரைப்படங்கள் மட்டும் எடுத்து தமிழ் சினிமாவில் எந்த ஒரு இயக்குனரும் இவ்வளவு பெரிய உச்சத்தை தொட்டது கிடையாது. ஆறாவது படமே தமிழின் மிகப்பெரிய நடிகரான ரஜினிகாந்தை வைத்து இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ்.

லோகேஷ் கனகராஜ் குறித்து எப்போதும் மக்கள் மத்தியில் நல்ல பெயர் உண்டு. ரசிகர்கள் குறித்து லோகேஷ் கனகராஜ் தனது பேட்டியில் பேசும் பொழுது எப்போதும் அவர்களுக்கு மரியாதை கொடுத்து பேசுவார்.

அதேபோல தற்சமயம் ஜூனியர் ஆர்டிஸ்ட் குறித்து ஒரு பேட்டியில் பேசும் பொழுது அனைவரையும் வியக்க வைக்கும் வகையில் சில விஷயங்களை பேசி இருந்தார். விக்ரம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளுக்காக அதிகமான ஜூனியர் ஆர்டிஸ்ட்களை வரவழைத்து இருந்தார் லோகேஷ் கனகராஜ்.

அது குறித்து அவர் கூறும் பொழுது ஜூனியர் ஆர்டிஸ்ட் அனைவரும் அவர்கள் முகம் கொஞ்சமாவது அந்த படத்தில் தெரிந்து விடாதா என ஏங்குவார்கள். எனவே அவர்கள் நடிப்பிற்கு நாம் மரியாதை கொடுக்க வேண்டும்.

அவர்களெல்லாம் அப்போதுதான் படத்திற்கு நடிக்க வந்திருப்பார்கள் எனவே அவர்களிடம் திட்டக்கூடாது, நல்ல வகையில் நடந்து கொள்ள வேண்டும் மேலும் அப்படி ஒரு இடத்தில் இருந்துதான் நாம் அனைவருமே சினிமாவிற்கு வந்திருக்கிறோம் என்பதை மறந்து விட கூடாது என்று லோகேஷ் கனகராஜ் பேசியிருந்தார்.

POPULAR POSTS

shivani narayanan
dhanush suchitra
sivaji sowcar janaki
demon slayer hasira training arc 1
gangai amaran ilayaraja
jio cinema
To Top