Connect with us

சிகரெட் அடிச்சா தப்பிச்சடலாம்!.. தெலுங்கு நடிகரிடம் வாலியை கோர்த்துவிட்ட இசையமைப்பாளர்!.. எப்படி வந்து சிக்கிருக்கேன்..

vaali

Latest News

சிகரெட் அடிச்சா தப்பிச்சடலாம்!.. தெலுங்கு நடிகரிடம் வாலியை கோர்த்துவிட்ட இசையமைப்பாளர்!.. எப்படி வந்து சிக்கிருக்கேன்..

cinepettai.com cinepettai.com

தமிழில் உள்ள பாடலாசிரியர்களில் கண்ணதாசனுக்கு பிறகு மிகவும் பிரபலமானவர் கவிஞர் வாலி. கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் பல வருடங்களாக பாடலாசிரியராக இருந்து மாறும் காலகட்டத்திற்கு தகுந்தார் போல அவரது பாடல் வரிகளையும் மாற்றி அமைத்துக் கொடுத்தவர் வாலி.

எம்.ஜி.ஆர் சிவாஜி கணேசன் காலகட்டத்தில் துவங்கி விஜய் அஜித் கால கட்டம் வரையிலும் பாடல் வரிகள் எழுதிய ஒரே தமிழ் திரை பாடலாசிரியர் வாலி மட்டுமே, இதனால் தமிழ் திரை கலைஞர்களிலேயே அதிகமான அனுபவங்களை கொண்டவராக வாலி இருக்கிறார்.

அவரது ஆரம்பகால வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான விஷயம் ஒன்றை ஒரு பேட்டியில் பகிர்ந்து இருந்தார். வாலி சினிமாவிற்கு வந்த புதிதில் பல இடங்களில் வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தார். அப்பொழுது தெலுங்கு படத்திற்கு பாடல் வரிகள் எழுதுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. நடிகர் ஸ்ரீனிவாச ராவ் அவருடைய பரிந்துரையின் பேரில் அந்த வாய்ப்பு கிடைத்தது.

அங்கு இருந்த இசையமைப்பாளரிடம் வாலியை அழைத்துச் சென்றார் ஸ்ரீனிவாசராவ். அங்கு சென்றது நீங்கள் எந்த சிகரெட் அடிப்பீர்கள் என்று கேட்டுள்ளார், இசையமைப்பாளர் இருக்கிறார் இப்பொழுது போய் சிகரெட் பற்றி கேட்கிறீர்களே என்று அதிர்ச்சியாக கேட்டுள்ளார் வாலி. ஆனால் அதை கண்டுகொள்ளாமல் சீனிவாச ராவ் ஒரு சிகரெட்டை எடுத்து வந்து வாலியிடம் கொடுத்து இதை குடித்துக் கொண்டே இசை அமைப்பாளரிடம் பேசுங்கள் என்று கூறினார்.

வாலியும் அவ்வாறே செய்துள்ளார் ஆனால் பயத்துடனே அதை செய்துள்ளார். பிறகு இசையமைப்பாளர் போன பிறகு ஏன் அப்படி செய்ய சொன்னீர்கள் அவர் என்னைப் பற்றி என்ன நினைப்பார் புது பாடலாசிரியராக இருக்கிறான் நானால் நம் முன்னே சிகரெட் அடிக்கிறான் என தவறாக நினைத்து விட மாட்டாரா என்று கேட்டுள்ளார் வாலி.

அதற்கு பதில் அளித்த சீனிவாச ராவ் நான் உங்களை தமிழின் மிகப்பெரும் பாடல் ஆசிரியர் என்றும் உங்களை காண்பதே சிரமம் என்றும் அவரிடம் கூறியிருந்தேன். எனவே அந்த அளவிற்கு நீங்கள் பில்டப் கொடுத்து வைத்தால்தான் அவர் அதை நம்புவார் ஏனெனில் அவர் எப்போதுமே புது பாடலாசிரியர்களுக்கு வாய்ப்பு தருவதில்லை என்று கூறியுள்ளார் ஸ்ரீனிவாச ராவ்.

POPULAR POSTS

ilayaraja
rajini lokesh kanagaraj
sundar c kushboo
deva
vijay rajinikanth
pugazh vengatesh bhatt
To Top