இது ரொம்ப கேவலமா இருக்கு!.. இளையராஜாவை கடுப்பேத்தி விட்ட மிஸ்கின்!.. 5 நாள் நடந்த சண்டை..

mysskin ilayaraja

தமிழில் தனக்கென ஒரு பாணியை கொண்டு தனித்துவமான திரைப்படம் எடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் மிஷ்கின். அவர் இயக்கும் ஒவ்வொரு திரைப்படமும் தமிழ் சினிமாவில் உள்ள மற்ற படங்களில் இருந்து சற்று மாறுதலாக இருக்கும்.

அவரது முதல் திரைப்படமான சித்திரம் பேசுதடி திரைப்படத்தில் துவங்கி அனைத்து திரைப்படங்களும் வேறுபட்டு இருப்பதை பார்க்க முடியும். பிறகு மிஸ்கினுக்கு நடிப்பின் மீது ஆர்வம் அந்த காரணத்தினால் சில படங்களில் நடிக்க தொடங்கினார்.

அதற்கு அதிக வரவேற்பு கிடைத்தது. தற்சமயம் அதிக படங்களில் நடித்து வருகிறார். விஜய் நடித்து வெளியான லியோ படத்திலும் நடித்துள்ளார் சைக்கோ திரைப்படத்தை இயக்கும்போது நடந்த சுவாரசியமான தகவல் ஒன்றை கூறியிருந்தார் மிஸ்கின்.

சைக்கோ திரைப்படத்திற்கு இளையராஜாதான் இசை அமைத்தார் அதில் உன்ன நெனச்சி நெனச்சி என்கிற ஒரு பாடல் மிகவும் பிரபலமானதாகும் அந்தப் பாடலுக்கு இசையமைப்பதற்காக இளையராஜாவை வைத்து செய்து இருக்கிறார் மிஷ்கின்.

இது குறித்து அவர் பேட்டியில் கூறும்பொழுது இளையராஜா போட்ட எந்த இசையும் எனக்கு பிடிக்கவில்லை அதனால் அவரை ஐந்து நாட்களாக திரும்பத் திரும்ப புதிய இசையை போட சொல்லிக் கொண்டே இருந்தேன் இறுதியாக ஒரு இசை பிடித்தது. பிறகு அதற்கான வரிகளை கபிலன் வைரமுத்துவை வைத்து எழுதியபோது அந்த வரிகள் இளையராஜாவிற்கு பிடிக்கவில்லை என்று கூறிவிட்டார்.

அதன் பிறகு இளையராஜாவே ஒரு பாடல்வரிகளை எழுதி கொடுத்தார் அவற்றை பார்த்துவிட்டு நான் கேவலமாக இருக்கிறது என்று கூறிவிட்டேன். பிறகு அந்த பாடலுக்கு சித் ஸ்ரீராமை பாட வைக்கலாம் என கூறினேன்.

இதனால் எனக்கும் இளையராஜாவுக்கும் ஐந்து நாள் சண்டை நடந்தது. இப்படி பல சண்டைகளுக்கு நடுவில்தான் அந்த பாடல் உருவானது என கூறியுள்ளார் மிஸ்கின்.