News
விஜய் கட்சி ஆரம்பிச்சுட்டு மோசடிதான் பண்றாரு!.. லிஸ்ட் போட்டு விளக்கிய பத்திரிக்கையாளர்!..
Vijay Politics: விஜய் கட்சி தொடங்கியது முதலே தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் தீயாய் இறங்கி வேலை பார்த்து வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள பல ஊர்களில் விஜய்க்காக ஏகப்பட்ட பேனர்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
நல்ல வேலையாக விஜய் தற்சமயம் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்று கூறிவிட்டார். இல்லையென்றால் விஜய் குறித்த பதாகைகளும் பேச்சுக்களும் இன்னமுமே அதிகமாக இருக்கும். அரசியலுக்கு வந்தது முதல் சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கும் குரல் கொடுக்க துவங்கியிருக்கிறார் விஜய்.

விஜய் மீது வெகு நாட்களாகவே இருந்து வந்த குற்றச்சாட்டு இதுதான். சமூகத்தில் நடந்து வரும் பல விஷயங்களுக்கு அவர் குரல் கொடுக்காமலே இருந்து வந்தார். தற்சமயம் ஒரு அரசியல்வாதியாக அதற்கு குரல் கொடுக்க துவங்கியிருக்கிறார்.
விஜய் கட்சி:
இந்த நிலையில் விஜய் கட்சி துவங்கி அவரது கட்சியில் இதுவரை 50 லட்சம் நபர்கள் இணைந்துள்ளதாக பேச்சுக்கள் இருக்கின்றன. இது குறித்து பிரபல சினிமா பத்திரிக்கையாளர் பிஸ்மி கூறும் பொழுது அதில் எந்த உண்மையையும் இல்லை என்று கூறுகிறார்.
விஜய் கட்சி துவங்கியதற்கு என்ன காரணம் என்று அவர் கூறும் பொழுது ஒவ்வொரு பிரபலங்களும் நிறைய பணம் சம்பாதித்த பிறகு அவற்றை சேமித்து வைப்பது என்பது அவர்களுக்கு கடினமான விஷயமாக மாறுகிறது. அப்பொழுது அவர்களுக்கு ஒரு அரசியல் செல்வாக்கு தேவையாக இருக்கிறது.

அதனால்தான் அடுத்து அவர்கள் அரசியலுக்கு வருகிறார்கள். விஜய்யும் அப்படியாகத்தான் அரசியலுக்கு வந்திருக்கிறார். அதேபோல விஜய் கட்சியில் 50 லட்சம் பேர் இணைந்து இருப்பதாக கூறுவதெல்லாம் சுத்தமாக நம்ப முடியாத விஷயமாக இருக்கிறது.
ஏனெனில் எவ்வளவு பழமையான கட்சி திமுக. அந்த கட்சியிலேயே 2 கோடி பேர் தான் மொத்த உறுப்பினர்களாக இருக்கும் பொழுது விஜய் கட்சியில் எப்படி குறுகிய நாளில் 50 லட்சம் பேர் இணைய முடியும். எப்படி திரைப்படம் வெளியாகும் பொழுது பல கோடிகளுக்கு அந்த படங்கள் ஓடியதாக போலி கணக்கு காட்டுகிறார்களோ அதே போலதான் இந்த விஷயத்திலும் செய்கிறார்கள் என்று கூறி இருக்கிறார் பிஸ்மி.
