Connect with us

ஹாலிவுட்டில் காபியடித்து லியோவில் சேர்த்த பாடல்!.. எல்லாம் அனிரூத் செஞ்ச வேலை!..

Latest News

ஹாலிவுட்டில் காபியடித்து லியோவில் சேர்த்த பாடல்!.. எல்லாம் அனிரூத் செஞ்ச வேலை!..

cinepettai.com cinepettai.com

ஹாலிவுட்டில் காப்பி அடித்து படப்பிடிப்பு எடுப்பது இயக்கம் செய்வது போன்றவை தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கிறது.

முக்கியமாக இயக்குனர் அட்லி, முருகதாஸ் போன்ற இயக்குனர்கள் இதை அதிகமாக செய்து வருகின்றனர். முருகதாஸ் எடுத்த கஜினி திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு ஹாலிவுட் படத்தின் காப்பி என்று கூறலாம். அதே போல இயக்குனர் அட்லி அவரது திரைப்படங்களில் ஹாலிவுட் படங்களில் வரும் காட்சிகளை அப்படியே தூக்கி வைப்பார்.

இந்த மாதிரியான விஷயங்களுக்கு நடுவே பாடல்களை காப்பி அடிக்கும் விஷயமும் நடந்து வருகிறது. இந்த நிலையில் லியோ படத்தில் வந்த ஒரு பாடல் அனிருத் ஹாலிவுட் இருந்து காப்பி அடித்து போட்டது என்று ஒரு குற்றச்சாட்டை ரசிகர்கள் எழுப்பி உள்ளனர்.

ஒரு பாடகர் பாடியுள்ள வேர் ஆர் யூ என்கிற பாடல் தான் லியோ திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று ரசிகர்கள் கூறுகின்றனர் இந்த நிலையில் youtube தளத்தில் ரசிகர்கள் இது குறித்து கருத்து தெரிவித்து வந்துள்ளனர்.

இதை பார்த்த ஒட்னிகா என்னும் அந்த நபர் எனது பாடலை எதாவது படத்தில் எனக்கு தெரியாமல் பயன்படுத்தி இருக்கிறார்களா என கேட்டுள்ளார். அதற்கு பதில் கொடுத்த ரசிகர்கள் ஆமாம் தமிழில் லியோ என்னும் திரைப்படத்தில் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று கூறியுள்ளனர்.

To Top